[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:23.41 PM GMT ]
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் இருந்தவண்ணம், வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர்.
வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர்.
இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது.
நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர்.
பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw5.html
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:18.10 PM GMT ]
திவுலப்பிட்டி குடாகம்மான பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியதாக இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாழைப்பழ வியாபாரி ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்த சென்ற பொலிஸ் உத்தியோகதத்தரையும் இளைஞர் கத்தியால் குத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்காப்பு நோக்கில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த வியாபாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw4.html
கனடாவின் குற்றச்சாட்டை இலங்கை நிராகரிப்பு
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:12.37 PM GMT ]
அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வடக்கு பெண்களை சிறிலங்காவின் இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக கனடா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் குற்றம் சுமத்தி இருந்தது.
அத்துடன் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தினால், வடக்கில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நிராகரித்து இலங்கையின் மனித உரிமைகள் பேரவைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
இதில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்ததுடன், இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கனடா புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்துகளால் தவறாக வழிநடத்தபட்டதால், சமூகங்களுக்கு இடையே உண்மையான நல்லிணங்களை கொண்டு வர தடை ஏற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களால் போரில் பாதிக்கபட்ட இடங்களில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லை என கனடாவின் குற்றம்சாட்டையும் இலங்கை நிராகரித்துள்ளது.
தற்போது நடந்து வரும் ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டில், இலங்கை பாதுகாப்பு வீரர்களினால் பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றங்கள் ஏற்படுவதாக கனடா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விடயத்தில் எந்தவித சாட்சியும் ஆதரமும் இல்லை எனக் கூறி இலங்கை நிராகரித்தது.
இலங்கைப் பாதுகாப்பு படையினரால் ஏற்பட்ட பாலியல் குற்றங்கள் போர் நடப்பதற்கு முன் மற்றும் போர் நடப்பதற்கு பின் என வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிகிறது.
போர் நடந்த காலத்தில் (ஜனவரி 2007 – மே 2009) 7 வீரர்கள் ஈடுபட்ட 5 குற்றங்களும் (119 குற்றங்களில்) போர் முடிந்த காலத்தில் (2009 – மே 2012) 10 வீரர்கள் ஈடுபட்ட 6 குற்றங்கள் (256 குற்றங்களில்) நடந்திருப்பதாகவும், 3.3 சதவிகித குற்றங்கள் மட்டுமே நடந்திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவ படையினர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்தும், தண்டனைகளை கடுமை படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
கனடா புலம்பெயர்ந்த கருத்துகளால் பொறுப்பற்ற மற்றும் ஆதரம் இல்லாத குற்றங்களை சுமத்த வேண்டாம் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafw3.html
Geen opmerkingen:
Een reactie posten