தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு பயங்கரமான அபாயம் - தயான் ஜயதிலக்க

மாவனல்லை பள்ளிவாசலை அகற்ற பொலிஸ் உதவியை நாடிய பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 09:47.56 AM GMT ]
மாவனல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் உள்ள ஹேரேமினியா தாருல் ஹிக்மா பள்ளிவாசலை அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறு கோரி பொதுபல சேனா அமைப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
உரிய பதிவுகளை மேற்கொள்ளாது குறித்த பள்ளிவாசல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றது என்ற அடிப்படையில் அந்த அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தலைமை பிக்குவான மெதிரிகிரியே புஞ்ஞசார தேரர், பொதுபல சேனா அமைப்பின் சார்பில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து பள்ளிவாசலுக்கு சென்ற பொலிஸாருக்கு, பள்ளிவாசல் நிர்வாகம் அதன் பதிவு ஆவணங்களை காட்டியுள்ளனர்.
முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களம் இதனை பள்ளிவாசலாக அங்கீகரித்துள்ளது.
குறித்த பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுமாறு கோரி பொதுபல சேனா சிறிய மற்றும் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்களை பிரதேசத்தில் மேற்கொண்டது. எனினும் பள்ளிவாசலை அகற்ற எந்த காரணங்களும் இல்லை என பள்ளிவாசல் நிர்வாகம் தெளிவாக கூறியுள்ளது.
சிங்களவர்கள் பெருபான்மையாக வாழ்ந்து வரும் மாவனல்லை பிரதேசத்தில் முஸ்லிம் மக்களும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZeuz.html
நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு பயங்கரமான அபாயம் - தயான் ஜயதிலக்க
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 10:06.37 AM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிரான நியமிக்க உள்ள சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டால், அது இலங்கைக்கு பயங்கரமான அபாயமாக இருக்கக் கூடும் என முன்னாள் ராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
குறித்த சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவர் பதவியை சர்வதேசத்தில் நன்மதிப்பை பெற்ற ஒருவருக்கு வழங்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகிறார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானை அதற்காக தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கொபி அனான் அதனை நிராகரித்துள்ளார் எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜதந்திர ரீதியில் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக அவரை தலைவர் பதவிக்கு தெரிவுசெய்ததாக கூறப்படுகிறது.
இது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் தந்திரம் என இராஜதந்திரிகள் கோடிட்டுக்காட்டியுள்ளனர்.
கொபி அனான் போன்ற நோபல் பரிசு பெற்ற ஒருவரை விசாரணைக்குழுவின் தலைவராக நியமித்தால், அவருக்கு வீசா வழங்குவதை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க முடியாது.
அத்துடன் அவர் இலங்கையில் பயணிக்கும் இடங்கள் மற்றும் சந்திக்கும் நபர்கள் தொடர்பில் வரையறைகளை விதிக்க முடியாது.
கொபி அனானுக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இலங்கைக்கு சார்பான நாடுகளும் இலங்கையை விமர்சிக்க கூடும்.
13 பேரை கொண்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் சர்வதேச புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள்.
மேற்படி விசாரணைக்குழுவை நியமிப்பதன் மூலமாக நவநீதம்பிள்ளை இலங்கைக்கும் இலங்கை இராணுவத்திற்கும் பாரிய அழுத்தங்களை கொடுக்க முயற்சித்து வருகிறார் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள மனித உரிமை தொடர்பான இறுதியறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் போது இலங்கைக்கு விஞ்ஞான ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் விதிக்கப்படக் கூடும் எனவும் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZeu0.html

Geen opmerkingen:

Een reactie posten