[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 03:30.38 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் வெளிநாட்டுப் பயணத்தில் இலங்கைக்கு முதலிடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று இன்று பூட்டானுக்குப் பயணமாகவுள்ளது.
தற்போது நடைபெறும் இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர், பெரும்பாலும், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெறும் இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர், பெரும்பாலும், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை உட்பட சார்க் நாடுகள் பதவியேற்பு விழாவின் போது அழைப்பு விடுத்திருந்தன.
இந்த நிலையில், மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இலங்கையாக இருக்கலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.
எனினும், கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், இலங்கை, பாகிஸ்தானுக்கான பயணங்கள் குறித்து கலந்துரையாடப்படவேயில்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூட்டான், நேபாளம், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்வது குறித்தே, கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறுதியில் முதல் பயணத்தை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான பூட்டானுக்கு மேற்கொள்வது என்று முடிவாகியுள்ளது.
இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறேசிலில் அடுத்த மாத நடுப்பகுதியில் நடக்கவுள்ள பிறிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZes4.html
புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் மட்டுமே எஞ்சியுள்ளார்கள் ?
06 June, 2014 by admin
எஞ்சியுள்ள 132 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது ஒருவருட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இராணுவத்தாலும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தினாலும் இணைந்து வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள் கூறும் கணக்கு படி இன்னும், 132 முன் நாள் விடுதலைப் புலிகளே தம்மிடம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் சரணடைந்து காணமல் போன நூற்றுக்கணக்கான போராளிகள் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது ?
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6935
Geen opmerkingen:
Een reactie posten