40 இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகத்தில் பிரான்ஸ் பிரஜை…
அவர்களில் ஐவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், ஏனைய 6 பேரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது.
குறித்த சிறுவர்களை பிரான்ஸ் பிரஜைக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 32 வயதான இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பிரான்ஸ் பிரஜைக்கு, துஷ்பிரயோகத்திற்காக பல சிறுவர்களை விநியோகித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 52 வயதான சந்தேகநபர் 2006 முதல் 2012ஆம் ஆண்டு வரை பல தடவைகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
அவர் வேறு நாடுகளிலும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபர் தற்போது பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரான்ஸ் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/74610.html
முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு முன் ஆயுதப் பயிற்சியில் பிக்குகளின் திடுக்கிடும் காட்சிகள்
மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப் பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாhரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74582.html
Geen opmerkingen:
Een reactie posten