மட்டக்களப்பில் பிரபல பாடசாலை முன் பெற்றோர், மாணவர்கள் போராட்டம்
மட்டக்களப்பு நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7.15 தொடக்கம் 8.00 மணிவரையில் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆளுமை இல்லாத அதிபர் வேண்டாம், திறனற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களை புறந்தள்ளும் அதிபரை நிறுத்து போன்ற அதிபருக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.நிலாகரன், அதிபரை இடமாற்றுமாறு வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பாடசாலையில் மாணவர்கள் தூங்கும் நிலையே உள்ளது. கடந்த காலத்தில் இருந்த நிலை பின்நோக்கி செல்கின்றது. அதிபர் ஆசிரியர்களை சரியான முறையில் கண்காணிப்பதில்லை. ஒரு சில ஆசிரியர்களை வைத்துக்கொண்டு சிரேஸ்ட ஆசிரியர்களை பின்தள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார் என்றார்.
இதேவேளை பாடசாலைக்கு வருகைதந்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாடசாலை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். அதேபோன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை வழங்குமாறு பெற்றோரிடமும் பணிப்பாளர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/71656.html
புலிகளின் முக்கியஸ்தர்களை காட்டிக் கொடுத்தவர் விபரங்கள் வெளியானது
மலேசியாவுக்கு திரும்பிய அவரை, அன் நாட்டுப் பொலிசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர் விடுதலைப் புலிகளோடு தொடர்பில் இருந்த விடையத்தை இலங்கை ஊடாக மலேசியப் பொலிசார் அறிந்துகொண்டார்கள். இதன் பின்னர் இலங்கை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நந்தகோபனை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. அவரை பூசா முகாமில் தடுத்துவைத்து, சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பல சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.
இன் நிலையில் நந்தகோபனே மலேசியாவில் 3 தமிழர்கள் உள்ளார்கள் என்றும், அதில் குஷாந்தன் என்பவர் முக்கியமான நபர் என்றும் இலங்கை புலனாய்வுக்கு தகவல்களை வழங்கியுள்ளார். புலிகளின் வான் படையின் 2ம் நிலை பொறுப்பாளராக குஷாந்தன் கடமையாற்றினார் என்றும், அவர் கேணல் ஷங்கர் அவர்களின் மகளை மணம் முடித்தவர் என்பது போன்ற விடையங்களையும் நந்தகோபன் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே குஷாந்தன் உட்பட மேலும் 2 தமிழர்களை கைதுசெய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலிசார் மலேசியப் பொலிசாரிடம் கேட்டுள்ளார்கள். போர் முடிவுற்ற பின்னர், இலங்கையில் வாழமுடியாத சூழலில் இந்த மூவரும் அங்கிருந்து சென்று மலேசியாவில் வேலைசெய்து வாழ்ந்து வருகிறார்கள்.
விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப பார்கிறார்கள் என்று ஒரு மாபெரும் செய்தியைப் பரப்பி, அதனூடாக பல காரியத்தை சாதித்து வருகிறது இலங்கை அரசு. இன் நிலையில் தான் இம்மூவரும் புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முனைவதாக கூறி அவர்களை மலேசியப் பொலிசார் கைதுசெய்தது மட்டுமல்லாது, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியும் உள்ளார்கள்.
முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த இந்த மூவரும் தற்போது எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடு படாத நிலையில், இவர்கள் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மலேசிய அரசு, இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.
புலிகளின் முக்கியஸ்தர்களை காட்டிக் கொடுத்தவர் விபரங்கள் வெளியானது
அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.
தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.
அச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்
கேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.

விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்
விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்
குசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.
குசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்
http://www.jvpnews.com/srilanka/71653.html
Geen opmerkingen:
Een reactie posten