[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 07:04.19 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நவீன அறிவு பூரணமான உலகத்தில் நாம் வாழ்கின்றோம்.
நாம் ஆடம்பர உணவுகளை உண்கின்றோம், ஆடம்பர வாகனங்களின் பயணம் செய்கின்றோம். ஆடம்பர உடைகளை அணிகின்றோம். சன் கிளாஸ்களை அணிகின்றோம். நவீன நாகரீகம் எம்மை கடந்து செல்கிறது.
என்ன செய்தாலும் குணாதிசயங்களின் அடிப்படையில், நாம் இன்னும் காடுகளில் வாழ்கின்றோம். பரிணாம வளர்ச்சியடைந்த குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான்.
தாடிகளை மழித்து தலைமுடியை வெட்டி எப்படியான நாகரீகமாக இருந்தாலும் மனிதர்களிடம் சிறந்த குணாதிசயங்கள் இல்லாமல் போய்விட்டன.
அப்படி பார்க்கும் போது குணாதிசயங்களின் அடிப்படையில், இலங்கையில் இன்னும் பரிணாம வளர்ச்சியடையாத குரங்குகளே இருக்கின்றன எனவும் அமைச்சர் குரே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt6.html
கொபி அனானுக்கு வீசா வழங்குமா இலங்கை?
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:49.15 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவின் தலைவர் என்ற வகையில் கொபி அனான் இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது.
மேற்படி விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்க உள்ளார்.
எவ்வாறாயினும் கொபி அனானுக்கு வீசா வழங்கும் விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலும் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கொபி அனானின் இலங்கை வருகை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். அத்துடன் கொபி அனான் இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்த இடமளிக்கக் கூடாது என மேலும் சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
கொபி அனான் 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பணியாற்றியதுடன் 2001 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt5.html
Geen opmerkingen:
Een reactie posten