கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரைத் தொடர்ந்து முஸ்லிம் ஆளுனர்
மேற்படி பேச்சு வார்த்தையின் போது ஐ.ம.சு.கூ சார்பில் இரண்டரை வருடங்களும் ஸ்ரீ.ல.மு.கா சார்பில் இரண்டரை வருடங்களும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக ஸ்ரீ.ல.மு.கா ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டது. ஆனால் ஐ.ம.சு.கூ சார்பில் இதுவரைக்கும் ஒருவர் கூட இவ்வாறானதொரு கருத்தை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்படி ஒப்பந்தத்திற்கான எழுத்து மூலமான ஆவனங்கள் கூட எதுவுமே இல்லை.
இது இவ்வாறு இருக்க ஐ.ம.சு.கூட்டமைப்பின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உடைய ஆட்ச்சிக்காலம் இரண்டு வருடங்கள்கூட கடக்காத நிலையிலே ஓரு சில ஊடகங்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் கிழக்கிற்கு புதிய முதலமைச்சர் என்று பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது மக்கள் மத்தியில் வீன் குழப்பங்களை தோற்றி வைக்கும் ஒரு செயலாகவே இருக்கின்றது.
அது மட்டுமில்லாமல் ஸ்ரீ.ல.மு.கா தன்னைதான் அடுத்த முதலமைச்சராக வைக்க வேண்டும் என்று நான்கு நபர்கள் தலைமையிடம் நேரடியாகவும் தூதுப் புறாக்களை அனுப்பியும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதுடன் திருகோணமலை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா ஆதரவாலர்கள் மத்தியில் ஸ்ரீ.ல.மு.கா மத்தியிலோ அல்லது மாகாணத்திலோ இத்தனை வருடங்களாக ஒரு அமைச்சுகூட வழங்காமல் தம்மை கரிவேப்பிள்ளைகளாகப் பயன்படுத்திவருவதாக ஒரு விதமான ஆதங்கமும் நிலவிவருகின்றது.
இதேபோல் ஐ.ம.சு.கூட்டமைப்பிடமும் பங்காளிக்கட்சியான அ.இ.மு.க தமது கட்சி சார்பில் போட்டியிட்ட அமிரலிக்கு இரண்டரை வருடங்களின் பின்னர் முதலமைச்சர் அல்லது ஒரு அமைச்சாவது வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
எல்லாம் அப்படி இருக்க அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து சில செய்திகள் எமக்கு கிடைத்துள்ளது.
எல்லாம் அப்படி இருக்க அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து சில செய்திகள் எமக்கு கிடைத்துள்ளது.
அதாவது அசாங்கம் ஐந்து வருடங்களும் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் அவர்களையே வைக்க வேண்டும் என்ற மனநிலையியே இருப்பதாகவும் அப்படி கிழக்கு மாகாணசபையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமாயின் இன்றைய ஆளுனராக இருக்கின்ற மொகான் விஜயவிக்கிரம அவர்களுடைய பதவிக்காலம் முடிவடைவதாலும் இந்தியா உற்பட மேற்கத்தைய நாடுகளும் வட கிழக்கிள் சிறுபான்மை இனத்தவரிலிருந்து தமிழ் பேசும் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும் என்ற நெருக்கடியை குறைப்பதற்காகவும் நஜீப் அப்துல் மதீத்தை அடுத்த ஆளுனராக நியமிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சகோதரரான பஷில் ராஜபக்ஷ மற்றும் பல சிறேஷ்ட அமைச்சர்களுடனும் கலந்துரையாடியே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரச தரப்பின் சில முக்கிய வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
அத்துடன் ஸ்ரீ.ல.மு.கா கிழக்கு மாகாண சபையில் அரசைவிட்டு விலகினால் மத்திய அரசாங்கத்திலும் அமைச்சுக்களை இராஜினாமா செய்து அரசைவிட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் அப்படி இல்லையாயின் தம்முடன் ஒத்து வந்தால் மத்திய அரசில் இரண்டு பிரதி அமைச்சுக்களை வழங்க இருப்பதாகவும் அதற்காகத்தான் கடந்த வருட இறுதியில் ஸ்ரீ.ல.மு.கா இற்கு அரசு வழங்க இருந்த இரன்டு பிரதி அமைச்சுக்களை வழங்காமல் நிருத்தி வைத்தது என்றும் அரச தரப்பு வட்டாரங்களிளல் இருந்து தெரிய வருகிறது.
எது எப்படியோ தொடர்ந்தும் நஜீப் அப்துல் மஜீத் அவர்களுக்கு முதலமைச்சு அல்லது ஆளுனர் பதவி நிச்சயம். முதலமைச்சர் பதவிக்கு ஸ்ரீ.ல.மு.கா இற்குல் அதிக நாட்காலிப் போட்டி நிலவுவதால் முதலமைச்சை அரசு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் பிளவு நிச்சயம். அது மட்டுமில்லாமல் ஸ்ரீ.ல.மு.கா கட்சியில் உள்ள அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுப்பதவியை இழப்பதற்கும் தயார் நிலையில் இல்லை.
http://www.jvpnews.com/srilanka/71650.html
பாய்ச்சலுக்குத் தயாரானது ஐ.நா! சமாளிக்குமா இலங்கை..
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமிக்கவுள்ள விசாரணைக் குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள், அடுத்த எட்டு மாதங்களில் சாட்சிகளை சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பெறவும், ஏனைய தகவல் மூலங்களைப் பெற்று, தமது கண்டறிவை முழுமைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கும், ஆசிய பசுபிக். வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைக் குழு அடுத்த வாரங்களில் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறும் இரண்டு நிபுணர்கள், உயர்மட்ட நிபுணத்துவத்தைர் வழங்கவும், விசாரணைகளை வழிநடத்தவும், பகுப்பாய்வு செய்யவும், அறிக்கையை தயாரிக்கவும், பத்து மாதங்களுக்கு நலன்சார் அடிப்படையில் பணியாற்றவுள்ளனர் என்று சிறிலங்கா விசாரணைக்கான பூர்வாங்க வரவுசெலவுத் திட்டம் மற்றும் பணியாளர்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும், ஆனால் விசாரணை அறிக்கை, இரண்டு நலன்சார் நிபுணர்களின் முத்திரையுடனேயே வெளியிடப்படும். இவர்களில் ஒருவர் மிகவும், உலக அரங்கில் மிகவும் மூத்த பிரமுகர் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விசாரணைக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான் விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அணுகப்பட வேண்டிய மூத்த நிபுணர்களின் பட்டியல் ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் இருப்பதாக அறியப்படுகிறது.
மைக்கல் கிர்பி அல்லது கோபி அன்னான் போன்ற- அனைத்துலக அளவில் உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் இருக்க வேண்டும் என்று எமக்குத் தெரியும் என, விசாரணைக் குழு அமைப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மைக்கேல் கிர்பி அவுஸ்ரேலிய நீதிபதியாவார்.
இவரே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட வடகொரியா குறித்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தார். எனினும், கோபி அன்னான் சிறிலங்கா குறித்த விசாரணைக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், இந்த விசாரணைக் குழுவின் தலைவரே, ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் அறிக்கையை கையளிக்க வேண்டும். அவ்வாறாயின் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலராக இருந்த கோபி அன்னான், தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தநிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து, வரும் ஓகஸ்ட் மாதம் விலகவுள்ள நவநீதம்பிள்ளையினால், சில உயர்மட்ட பிரமுகர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
அதேவேளை, ஆரம்பகட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, பணியாளர்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், மூன்று மனித உரிமை விசாரணையாளர்கள், ஒரு சட்ட ஆலோசகர், ஒரு மூத்த ஒருங்கிணைப்பாளர், ஒரு நிர்வாகி, சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரை விசாரணைக் குழுவில் நியமிக்க ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் முடிவு செய்துள்ளது.
மனித உரிமை விசாரணையாளர்களில் ஒருவர் பாலின சமத்துவம் தொடர்பான நிபுணராக இருப்பார் என்று ஆரம்பக்கட்ட பணியாளர் வரைவு கூறுகிறது. ஒளிப்பட மற்றும் காணொளி ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக, தடயவியல் ஆலோசகர் ஒருவரும், குறுகிய காலத்துக்கான ஆவண ஆலோசகர் ஒருவரும் இந்தக் குழுவில் சேர்க்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.
சிறிலங்கா அனுமதி வழங்கினால், இந்த விசாரணைக் குழுவுடன், பயணம் செய்வதற்கு ஒரு பாதுகாப்பு அதிகாரியும் வழங்கப்படுவார். இந்த விசாரணைகளுக்கு 1.4 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், நவநீதம்பிள்ளையின் பணியகம் இந்த விசாரணைக் குழுவின் காலத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது, இந்த செலவுத்தொகை அதிகரிக்கக் கூடும்.
இந்த மாத முற்பகுதியில், விசாரணைக்குழு பற்றிய இறுதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். விசாரணையாளர்கள், மூன்று சம்பந்தப்பட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுடன் ஆலோசனை நடத்துவர்.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும், தன்னிச்சையான கொலைகள், பலவந்தமாக காணாமற்போனோர் குறித்த பணிக்குழு, மற்றும் சித்திரவதைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர்களுடனேயே இந்த விசாரணைக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இரண்டு நலன் சார் நிபுணர்கள் தலா ஐந்து நாட்கள் சிறிலங்கா, ஜெனிவா மற்றும் ஆசிய பசுபிக்கிற்கு பயணம் மேற்கொள்ளவும், ஒரு நிபுணர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு தலா ஐந்து நாட்கள் பயணம் செய்யவும், பயணச் செலவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டு நிபுணர்களும், இந்த இடங்களில், தகவல் சேகரிப்பு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் நேர்காணல் செய்வது, போன்றவற்றில் ஈடுபடுவர் என்றும் ஐ.நா ஆவணம் கூறுகிறது.
விசாரணைக் குழுவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், தலா பத்து நாட்கள், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கு பயணம் மேற்கொள்வர். இரண்டு அதிகாரிகள், ஐரோப்பாவுக்கு ஏழு நாட்கள் பயணம் மேற்கொள்வர். ஏனைய இரண்டு அதிகாரிகள், வட அமெரிக்காவுக்கு தலா ஏழு நாட்கள் பயணம் செய்வர்.
இவர்கள், சிறிலங்காவுக்கு வெளியே வசிக்கும் எல்லா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் இருந்தும், ஏனைய தகவல் மூலங்களில் இருந்தும் தகவல்களைத் திரட்டவுள்ளனர். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைக் குழுவை, வரும், 9ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக அறிவிக்கவுள்ளார்.
10 மாதங்கள் பணியாற்ற வேண்டியுள்ளதால், விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கும் – இரண்டு உயர்மட்ட நிபுணர்களில் ஒருவரின் நியமனத்தை உறுதி செய்து கொள்வதில், ஏற்பட்ட இழுபறியால் இந்த விசாரணைக் குழு அறிவிப்பில் தாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று பல்வேறு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விசாரணைக் குழு தமது ஆரம்பக்கட்ட வாய்மொழி அறிக்கையை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இறுதி அறிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரின் ஒழுங்கமைப்புக்கு முன்னதாக – அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே தயார் செய்யப்பட வேண்டும்.
இதனால், இந்த விசாரணைக் குழுவுக்கு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க ஆறு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், விசாரணைப் பொறிமுறை குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதில், நவநீதம்பிள்ளையும் அவரது பணியாளர்களும் உறுதியாக உள்ளனர்.
இந்த விசாரணைகள், வடகொரியா மற்றும் சிரியா தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் போலல்லாது, ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகத்தின் விசாரணையாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில், நவநீதம்பிள்ளையின் பணியகம் உறுதியாக உள்ளது.
இவ்வாறு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71647.html
Geen opmerkingen:
Een reactie posten