தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

ஆஸியில் குடிவரவுக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-சமயத் தலைவர்கள் கைது!

முஸ்லிம் இளவரசருக்கு இலங்கை தொடர்பில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் சதித்திட்டம்!- உயர்கல்வி அமைச்சர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:22.36 AM GMT ]
ஐ.நா மனித உரிமை ஆணையாளராக நியமிக்கப்பட உள்ள முஸ்லிம் இனத்தவரான இளவரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இலங்கை தொடர்பில் அவருக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இந்த நாட்டில் மிகவும் ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
சகலரும் இலங்கையர் என்ற இன்னும் சகவாழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அதியுயர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமைய சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எந்த இனத்தவராக இருந்தாலும் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க உள்ளிட்ட விரும்பிய மதங்களை பின்பற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க பொலிஸார் உள்ளனர். கலங்களை தடுக்க இராணுவத்தினர் உள்ளனர் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaetz.html
ஆஸியில் குடிவரவுக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-சமயத் தலைவர்கள் கைது
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:25.30 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் குடிவரவு தடுப்பு முகாமில் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலை பற்றி எடுத்துரைக்க சமயப் பிரமுகர்கள் ஒன்பது பேர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
religious leaders அன்பு வழியை ஏற்படுத்தும் என்ற பெயரில் அணிதிரண்டுள்ள சமயப் பிரமுகர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள 983 பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யும் போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
இந்தப் பிள்ளைகள் விடயத்தில் மத்திய அரசாங்கம் காருண்ய கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
அடிலெயிட் ஹில்ஸ் பிரதேசத்தில் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமி பிரிக்ஸின் அலுவலகத்திற்கு முன்னால் சத்தியப் பிரமாணம் செய்த சமயப் பிரமுகர்கள், துணிகளால் செய்யப்பட்ட பொம்மைகளைக் கையிலேந்தியிருந்தார்கள்.
சமகால குடிவரவுக் கொள்கை எந்தளவு மனிதாபிமானத்திற்கு புறம்பானதாக இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துவது அவர்களின் நோக்கம்.
நேற்றைய நாள் முழுதும் நீடித்த போராட்டத்தைக் கண்டித்த பொலிஸார், மாலை 6.30 அளவில் ஸ்தலத்திற்கு விரைந்து சமயத் தலைவர்களைக் கைது செய்தார்கள்
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet0.html

Geen opmerkingen:

Een reactie posten