[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:03.17 AM GMT ]
இதனை அடுத்து அவரின் உடல் இலங்கையிலுள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சவுதி அரேபியாவிலிருந்து மலேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சவுதி அரேபியன் வானூர்தியிலேயே அபண் மரணமானதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
46 வயதான இப்பெண்ணின் சடலத்தை மலேசிய உயர்ஸதானிகரகத்தின் ஊடாக மலேசியாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes6.html
பேருவளையில் மீண்டும் தாக்குதல்! இன வன்முறை வெடிக்கும் அபாயம்- பெற்றோல் குண்டுகள் மீட்பு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:20.56 AM GMT ]
பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்றின் மீது நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாவலில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் காரணமாக இன முறுகல் நிலை ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
எனினும் தீ வைப்புச் சம்பவத்தைக் கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்து வந்த முஸ்லிம் இளைஞர்களை, அதிரடிப்படையினர் தாக்கமுற்பட்டதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பள்ளிவாசல் நிர்வாகம், உலமாக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடாக பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அளுத்கமவில் பள்ளிவாசலுக்கு அருகில் பெற்றோல் குண்டுகள் மீட்பு
அளுத்கம பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் அளுத்கம சீனவத்தை ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த இடத்தில் இருந்து 100 வெற்று போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அளுத்கம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் போது, தாக்குதல்களை நடத்த இந்த குண்டுகள், பள்ளிவாசலுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaety.html
Geen opmerkingen:
Een reactie posten