தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

நைஜீரியாவின் கோர முகம்: சடலங்களால் நிரம்பி வழியும் கிராமம் (வீடியோ இணைப்பு)

வட கிழக்கு நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் நான்கு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நைஜீரிவாவில் உள்ள கோஷே, அட்டகரா, அகபல்வா மற்றும் அகஞ்சாரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 300 பேர் வரை பலியாகியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
அப்பகுதி தீவிரவாதிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பலி எண்ணிக்கை எவ்வளவு என கண்டுபிடிக்க இயலவில்லை, மேலும் அப்பகுதி முழுவதும் சடலங்கள் மிகுந்து கிடக்கின்றன என்றும் மக்கள் பலரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் எனவும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் பியே தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் வடகிழக்கு பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 800 பேர் தங்கள் குடும்பங்களையும், மக்களையும் விட்டு வெளியேறி வருகின்றனர்.
http://www.newsonews.com/view.php?20SOlxdbcE80634e3oMQ3022ZnB2ddcdBn530eC6AAae4K08E4cb3lOm23

Geen opmerkingen:

Een reactie posten