சம்பூர் குடும்பங்கள் 162 வள்ளிக்கேணியில் மீள்குடியேற்றம்
மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள 162 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வள்ளிக்கேணியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தங்களது பூர்வீகக் கிராமமான சம்பூரை விடுத்து, வள்ளிக்ணேயில் குடியேற அம்மக்கள் விருப்பம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச செயலாளர் நடராசா பிரதீபன் தெரிவித்தார்.
இம்மக்கள் தற்போது, வேறு இடங்களில் மீளக்குடியமர விரும்புகின்றார்கள். இந்நிலையில், அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதேச செயலாளர் கூறினார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு. வேம்படித்தோட்டம், குறவன்வெட்டுவான், தங்கபுரம், சீதனவெளி ஆகிய இடங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சீதனவெளியில் ஏற்கனவே 84 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/72168.html
யாழ் இராணுவத்தினருக்கு தமிழ்மொழிப் பயிற்சியாம்
யாழில் பொதுமாக்களின் இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு தமிழ்மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளது. தமிழ்மொழிச் சகோதரர்களுக்கு சிங்களமொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, சிங்களமொழிச் சகோதரர்களுக்கு தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்வதற்கு மொழி கட்டாயமானது. அந்த வகையில், நாங்கள் தமிழ்மொழிச் சகோதரர்களுக்கு சிங்களமொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, சிங்களமொழிச் சகோதரர்களுக்கு தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்.
தமிழ்மொழி மூல பயிற்சிநெறியை சில இராணுவ வீரர்கள் கற்றுத் தேர்ந்துள்ளார்கள். சில இராணுவ அதிகாரிகள் உட்பட சில இராணுவத்தினர் இப்பாடத்தை சரியாக முடிக்கவில்லை. உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆகவே, உங்களாலும் தமிழ்மொழியை கற்க முடியும். தமிழ்மொழி கற்பது இலகுவானது.
நாட்டில் உள்ள மும்மொழிகளில் தமிழ், சிங்களம் கட்டாயமானதாகும். நாங்கள் இராணுவ வீரர்களுக்கு கூறிக்கொள்வதாவது, கட்டாயம் நீங்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதேவேளை, தமிழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் நீங்களும் சிங்களமொழியை கற்கவேண்டும்.
யாழ். குடாநாட்டில் அனைத்துப் பிரதேசங்களிலும் கடமையாற்றும் இராணுவ வீரர்களுக்குத் தமிழ்மொழியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தமிழ்மொழிப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது’ என்றார்.
http://www.jvpnews.com/srilanka/72165.html
இரகசியமாக பான் கீ மூனைச் சந்தித்த அமைச்சர் டலஸ்
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும் இந்தச் சந்திப்புக் குறித்த காரணத்தையோ, அதுபற்றிய எந்த விபரங்களையோ வெளியிடவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள சந்தர்ப்பத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/72162.html
Geen opmerkingen:
Een reactie posten