தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

பேஸ்புக்கில் ஆபாசப்படம் அனுப்பியவர் அச்சுவேலியில் அகப்பட்டார்!!

யாழில் 13 கோடி அமெரிக்க டொலர்களுடன், பொலிசாரிடம் இரு இளைஞர்கள்

டொலரை மாற்றித் தருவதாகக் கூறிய நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே உப்பாற்று பாலத்தில் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் வைத்திருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகளாக வந்தவர்களிடம் அமெரிக்க டொலர் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மூவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் தற்பொழுது திருகோணமலையில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/71538.html

பேஸ்புக்கில் ஆபாசப்படம் அனுப்பியவர் அச்சுவேலியில் அகப்பட்டார்

தனது நண்பனின் தங்கைக்கு பல நாட்களாக தொடர்ந்து ஆபாசப்படங்கள் அனுப்பியவர் நண்பனாலும் நண்பனின் உறவினர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் தொலைபேசி ஊடாக இரு நண்பர்களும் சண்டையிட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அச்சுவேலிப் பகுதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டுக்குச் சென்ற நண்பனும் உறவினர்களும் குறித்த இளைஞனை கடுமையாகத் தாக்கி எச்சரித்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் பொலிசார் கருத்துக் கூற மறுத்து விட்டனர் நையப்புடைக்கப்பட்டார்
http://www.jvpnews.com/srilanka/71535.html

Geen opmerkingen:

Een reactie posten