தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பேச்சை மோடி அரசாங்கம் செவிமடுக்காது: ஆங்கில ஊடகம்

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கப்போகும் அமைச்சர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 12:56.47 PM GMT ]
ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆட்சி, நிர்வாகம் மீது கோபம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தலைமையில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சிரேஷ்ட அமைச்சர் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இந்த போராட்டத்தில் இறங்க தீர்மானித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட போகும் அமைச்சர்கள் குழுவில் தினமும் ஜனாதிபதியை துதி பாடிய ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 12 அமைச்சர்கள் இந்த போராட்டத்தில் இறங்க இணங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை நிறுத்துவதா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக குறித்த அமைச்சர்கள் குழு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறின.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதே இந்த அமைச்சர்களின் அடிப்படையான நோக்கம் என்பதுடன் அதற்கு தடையேற்படுத்தும் செயற்பாடுகளுக்கு செல்வதில்லை எனவும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgq7.html
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பேச்சை மோடி அரசாங்கம் செவிமடுக்காது: ஆங்கில ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 12:07.26 PM GMT ]
புதிய இந்திய அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் லண்டனை மையமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரசாரங்களுக்கு உடன்படாது என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயரதிகாரியை கோடிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கமும் இலங்கையின் தமிழ்க்கட்சிகளும் இணைந்தே தமிழ்த் தீவிரவாதக் குழுக்களை ஊக்கப்படுத்தின.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்போதைய பாரதீய ஜனதாக் கட்சியையும் தமிழகத்தின் அதிகாரத்தை கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வழிக்கு கொண்டு வரமுடியாது.
இதேவேளை ஏற்கனவே இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு காங்கிரஸ் அரசாங்கம் தமது எதிர்ப்பை காட்டியது. அத்துடன் இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்தது.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் புதிய இந்திய அரசாங்கமும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இணைந்து செயற்படுவதை தடுக்கும் என்று இலங்கை அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgq4.html

Geen opmerkingen:

Een reactie posten