இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடு ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 02:36.14 AM GMT ]
இந்திய பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது இந்த முரண்பாடுகள் ஆரம்பித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்திய பிரதமருடனான முதல் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் அவருடன் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்செய்வது, நல்லிணக்கம் மற்றும் சம்பூர் அனல் மின்சார நிலையத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்து மோடி தமது வலியுறுத்தல்களை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மோடியுடனான பேச்சுவார்த்தையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தற்போது 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் அற்ற நிலையில் அமுல்செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சம்பூர் அனல் மின்சார நிலையத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவையாவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை சுட்டி நிற்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZhx4.html
விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை: டியூ குணசேகர
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 02:49.40 AM GMT ]
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த சிக்கல்களும் இல்லை என்று சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் ஹட்டன நகரில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர், 13வது அரசியல் அமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்கள் உள்ளன. எனினும் அவை எழுத்து வடிவில் மாத்திரமே உள்ளன.
அதனை நடைமுறைப்படுத்தும் போதே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை வடக்கின் காணிப் பிரச்சினைகளை தீர்கக சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் அவசியம் குறித்து அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன் வடக்கின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருக்கின்ற போது அவருக்கு கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படப் போவதில்லை.
எனினும் ஏனைய மாகாணசபைகளுக்கு அந்த பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதிலேயே பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZhx5.html
Geen opmerkingen:
Een reactie posten