தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

15 வயதான காதலியை கடத்திச் சென்ற காதலன் கைது

15 வயதும் 9 மாதங்களுமான பாடசாலை மாணவியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு 15 புளுமெண்டால் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் புத்தளம் - பாலாவி சந்திக்கு வரழைத்து அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கொழும்பு நோக்கி சென்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளரா என்பதை அறிய அவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten