கச்சத்தீவு அருகே கடந்த 1ம் திகதி கடலுக்கு சென்று மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த 7 படகுகளையும், அதில் இருந்தவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் 33 பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே பரிந்துரை செய்ததையடுத்து, 33 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து 33 மீனவர்களையும், ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளனர். அங்கிருந்து நேற்று மாலை ராமேசுவரம் துறைமுகத்துக்கு 33 மீனவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர் அங்கு மீனவர் சங்கத்தினர் அவர்களை வரவேற்றுள்ளனர்.
விடுதலையாகி வந்த மீனவர்கள் கூறுகையில், நாங்கள் அனுராதபுரம் சிறையில் 2 நாட்கள் இருந்தோம். அதற்கு பிறகு விடுதலை செய்யப்படுவதாகக் கூறி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, மீனவர்களை மட்டும் விடுதலை செய்வதாகவும் 6 படகுகள், மீன்பிடி சாதனங்களை விடுவிப்பது தொடர்பான விசாரணை வரும் யூலை 4ம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், எங்களை விடுவித்தது மகிழ்ச்சி என்றாலும், எங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றும் படகுகளை விடுவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
இலங்கை கடற்படையினர் எங்களை ஒப்படைக்க அழைத்து வந்தபோது, இலங்கை மீனவர்கள் தான், இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும், அதனாலேயே இந்திய மீனவர்களை கைது செய்வதாகவும் எங்களிடம் கூறினர்.
இதன் மூலம் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்கள் தான் காரணம் என்பது தெளிவாகிறது.
மேலும், சிறையில் இருந்தபோது இலங்கை மீனவ பிரதிநிதிகள் எங்களை சந்தித்து, இலங்கை கடல் பகுதிக்குள் தடைசெய்யப்பட்ட இழு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
http://www.newindianews.com/view.php?20yOlxdbco40634e3oMQ3022YmD3ddcfDmo30eM6AKae4U04A4cb3lOm23 |
Geen opmerkingen:
Een reactie posten