06 Jun 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1402041366&archive=&start_from=&ucat=1&
| இனப்படுகொலை பற்றிய ஜெயலலிதாவின் கருத்தை கண்டிக்கும்.. |
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அளித்த மனுவில் 'சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறிலங்கா அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சிறிலங்காவில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு. இதுகுறித்து இந்திய அரசாங்கத்துக்கு எமது முறையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது குறித்து சிறிலங்கா மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம்.
இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவது சிறிலங்காவுக்கு நல்லது. இப்போது, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்காது. இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சரியான பக்கத்தில்- அதாவது சிறிலங்காவின் பக்கம் இருப்பார் என்று நம்புகிறோம், என்று கூறியுள்ளார். |
06 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1402040962&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten