தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மொரட்டுவையில் கைது!

யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நாளை நியமனம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 06:10.52 AM GMT ]
யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ பாதுகாப்பு படைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்து நாளையதினம் வியாழக்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டது. இருந்த போதும் பல்வேறு மாற்று வழிகளின் முலமாக இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்கமைய புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தற்போதும் புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் மறைமுகமாகவும் அதே நேரம் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக மாவட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மிகவும் பெரியளவிலான வரவேற்று நிகழ்வுகள் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நாளையதினம் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந் நிகழ்வில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு படைத் தலைமையக அத்தியகட்சர் உள்ளிட்ட பலரும் பலாலிக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து இரானுவ வலயத்திற்குள் உள்ள விடுதியொன்றில் தமிழ் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த இரானுவத்தினருக்கு சான்றிதழ்களும் அன்றைய தினம் மாலை வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfs1.html

அத்துரலியே ரத்ன தேரரின் விளையாட்டு நாடாளுமன்றம்
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 06:13.19 AM GMT ]
தர்ம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தப் போவதாகக்கூறி நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழு தலைவர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்திற்கு வெளியில் நாடாளுமன்றம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளார்.
தூய்மையான எதிர்காலத்திற்கான தேசிய சபை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த நாடாளுமன்றம், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள புத்திஜீவிகள் சங்கத்தின் தலைமையகத்தில் கூடவுள்ளதாக ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தூய்மையான எதிர்காலத்திற்கான தேசிய சபை என்ற இந்த நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகல தரப்பினரும் கலந்து கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மாத்திரமல்லாது அனைத்து கட்சிகளுக்கும், நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உள்ள சகலருக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfs2.html

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மொரட்டுவையில் கைது
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 06:35.56 AM GMT ]
மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர், குறித்த இளைஞர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்விளைஞர்களை மொரட்டுவையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி, அந்த நபர் உறுதியளித்த நிலையிலேயே தாங்கள் இப்பகுதிக்கு வந்து விடுதியில் தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள், பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfs5.html

Geen opmerkingen:

Een reactie posten