ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டனிலிருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் சிட்டி ரைடர் ரக பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மழையின் காரணமாக பாதை வழுக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்ட வட்டகான் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்து வீடு ஒன்று சேதமாகியுள்ளது.
இதன்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நான்கு பேரும் தங்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்கின்றனர்.
தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
Geen opmerkingen:
Een reactie posten