தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 juni 2014

வடக்கு இளைஞர்கள் 13 பேர் மொரட்டுவையில் கைது

இலங்கைக்கு மீண்டும் அவுஸ்ரேலிய ரோந்துப் படகு..

சிறிலங்கா கடற்படைக்கு இரண்டாவது ஆழ்கடல் ரோந்துப் படகைக் கையளிப்பதற்கான ஆவணத்தில், அவுஸ்ரேலியா நேற்று ஒப்பமிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலியத் தூதுவர், றொபின் முடி மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.


இவற்றில் முதலாவது படகு, கடந்த ஏப்ரல் 24ம் நாள், சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு பி-350 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே இரண்டாவது படகை வழங்கும் ஆவணத்தில் நேற்று ஒப்பமிடப்பட்டுள்ளது. விரைவில் இது கொழும்புக்கு கொண்டு வரப்படும் என்று தெரியவருகிறதுjayanath-colambage
http://www.jvpnews.com/srilanka/71904.html

ஹக்கீமுக்கு வந்தது ஆப்பு

அவையில் அறிக்கை ஒன்றை விடுக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்காததையடுத்தே ஹக்கீம் இவ்வாறு கூறினார். கட்சித் தலைவர் என்ற வகையில் நிலையியற் கட்டளை 23(2)க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கூறிய ரவூப் ஹக்கீம் தம்புள்ளை பள்ளிவாசல் பற்றி ஓர் அறிக்கையை விடுக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார்.
நியதி சட்டத்தில் கட்சித்தலைவர் என்ற வகையில் அறிக்கை ஒன்றை விடுக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், நாடாளுமன்றில் நான்கு கட்சி தலைவர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறினார்.
மேலும் அறிக்கை ஒன்றை விடுக்க முன்னர் இந்த விடயத்தை ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டுமென அவர் கூறினார். இதை ஆட்சேபித்த ஹக்கீம் தன்னை கட்சித்தலைவராக அங்கீகரிக்காதது அபத்தமானது என்றார். அப்படியாயின் தனக்கு ஏன் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார். இது அர்த்தமற்றது என அவர் கூறினார்.
இச்சமயத்தில் குறுக்கிட்ட எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹக்கீம் இந்த பிரச்சினையை அமைச்சரவையில் எழுப்ப வேண்டும். அரசாங்கம் திருப்தியான முடிவை தராதுவிடின் அவர் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கூறியதுடன் கடந்த பொது தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க பட்டியலில் போட்டியிட்டது என்பதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.
ஐ.தே.க செய்வதறியாத நிலையில் உள்ளதால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திலிருந்து விலக வைப்பதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வமாக இருப்பதாக ஹக்கீம் பதிலடி கொடுத்தார்.
http://www.jvpnews.com/srilanka/71907.html

வடக்கு இளைஞர்கள் 13 பேர் மொரட்டுவையில் கைது

குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே மேற்படி 13பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர், மேற்படி இளைஞர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்விளைஞர்களை மொரட்டுவையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக அவர் உறுதியளித்த நிலையிலேயே தாங்கள் இப்பகுதிக்கு வந்த குறித்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/71910.html

Geen opmerkingen:

Een reactie posten