[ புதன்கிழமை, 04 யூன் 2014, 07:08.17 AM GMT ]
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் மக்கள் தொகையானது தற்போது 21.4 மில்லியனாகும். இந்த மக்கள் தொகையை 2020 ஆம் ஆண்டில் 28 மில்லியனாக அதிகரிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
நாட்டில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் வறுமையை போக்க முடியாத நிலைமையில், மக்கள் தொகையை மேலும் அதிகரித்து இலங்கையும் எதிர்காலத்தில் மற்றுமொரு சோமாலியாவாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZfs7.html
ஜனாதிபதியின் சொந்த ஊரில் ஒருவர் சுட்டுக்கொலை - கள்ளத் தொடர்பால் பெண் சுட்டுக் கொலை
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 07:33.39 AM GMT ]
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்த வாகன உதவியாளர் தங்காலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பிரபாத் சந்தன என்ற நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்காலை பிரதேசம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த கிராம் அமைந்துள்ள பிரதேசம் என்பதுடன் அவரது கார்ல்டன் இல்லமும் தங்காலையிலேயே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளத் தொடர்பால் பெண் சுட்டுக் கொலை
பிபில வெத்தாபெதிஇன்ன பிடகுபுர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் செய்த முறைப்பாட்டின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கள்ளத் தொடர்பின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத அதேவேளை பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZftz.html
பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது!- ரில்வின் சில்வா
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 07:17.24 AM GMT ]
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணையினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சர்வதேச விசாரணையினைக் கோருவது கூட்டமைப்பின் சுயநலப் போக்கினையே வெளிப்படுத்துகின்றது. தமிழர்கள் விடயத்தில் தமிழ் கட்சிகள் கூடிய கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதனாலோ அல்லது தவிர்ப்பதனாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது வடக்கில் சுதந்திரமானதும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றினை மட்டுமே.
யுத்த கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் செய்தவையும் பின்னர் இராணுவ அடக்கு முறைகளும் தமிழ் மக்களை பெரிதும் பாதித்து விட்டதென்பதே உண்மை.
அதனை நிவர்த்தி செய்து சமூகங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் இன்று அவசியமாக உள்ளது. அதை விடுத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் கேட்பது தற்போது அவசியமற்றதே.
மேலும் யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றினைக் கோருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடகமே. தமது சுயநல அரசியலை செய்வதற்காக தமிழர்களின் வாக்குகளை தக்க வைக்கும் தந்திரத்தினையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதனாலோ நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyG
Geen opmerkingen:
Een reactie posten