தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

புலிகளுடன் தொடர்புபட்ட 110 பேர் கைதாம்..

முஸ்லிம் தீவிரவாதிகளுடனான போர் ஆரம்பித்துள்ளது: ஹெல உறுமய

முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே அரசாங்கத்தின் முன் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் மதத் தலைவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனி ஈழத்திற்கான போராட்டத்தினை நாம் முறியடித்து இன்று நாட்டில் பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம். முப்பது வருடகால போராட்டத்தின் வெற்றி இன்று எமது நாட்டினை சர்வதேச அளவில் சிறந்த நாடாகவும் தீவிரவாதத்தினை அழித்த நாடாகவும் மாற்றியுள்ளது. வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து சாதாரண பொது மக்களை ஆயுதம் ஏந்த வைத்து மிகக் கொடுமையான செயற்பாட்டினை அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் செய்தது. அதே நிலைமை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அப்பாவி முஸ்லிம்களை மத அடிப்படையிலும் தீவிரவாத கொள்கைகளை புகுத்தியும் போராட்ட குணம் கொண்ட இனமாக மாற்ற ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம் தீவிரவாதிகளினால் இன்று நாட்டிற்கும் சிங்கள இனத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தீய சக்தியும் மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாத சக்திகளும் ஒன்றிணைந்து இலங்கையில் அமைதியை குழப்பி மக்களை சீரழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு செயற்பாடே அளுத்கம கலவரம். முஸ்லிம் சிங்கள மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி முழு நாட்டிலும் இனக் கலவரமொன்றினை ஏற்படுத்தவே முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் தீவிரவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இலங்கையிலும் முஸ்லிம் போராட்ட கொள்கையினை பரப்புகின்றனர். இதன் பிரதிபலிப்பே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள். ஒரு புறம் கலவரத்தையும் தூண்டிவிட்டு மறுபுறம் ஜனாதிபதியிடமும் பாதுகாப்பு செயலாளரிடமும் சென்று கண்ணிர் வடிக்கின்றனர்.
அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்களின் தாக்குதலில் பல சிங்கள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் சிங்கள மக்கள் எவரையும் ஹர்த்தால் அனுஸ்டிக்கவோ ஆர்ப்பார்ட்டம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களை மட்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அனுமதித்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும் ஏனையோருக்கு வேறு சட்டத்தையும் இந்த நாட்டில் பிரயோகிக்க முடியாது.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தின்படியே செயற்படுகின்றனர். அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. அதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளும் போது இலங்கை பௌத்த சிங்கள நாடு இங்கும் ஒரே சட்டம் அதுவும் பௌத்த சட்டமே செயற்பட வேண்டும். ஆனால் இங்கு மூவின மக்களையும் பாதுகாத்து அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாக பயன்படுத்தி நாட்டில் மத வாதத்தையும் முஸ்லிம் தீவிரவாதத்தையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/74651.html

புலிகளுடன் தொடர்புபட்ட 110 பேர் கைதாம்..

யுத்தத்திற்கு பின்னரான ஒற்றுமையை குழப்பி மறுபடியும் அதனை சீரழிக்க முயற்சி செய்பவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதுடன் இதுவரை அவ்வாறான 110 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மார்ச் மாதம் பளைப் பகுதியில் இடம்பெற்ற கைதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 51 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கு முன்பும் இடம்பெற்ற சந்தேகநபர்கள் கைதுகளின் அடிப்படையில் இதுவரை 110 பேர் கைதாகியுள்ளனர்.
இம்மாதம் 17 ஆம் திகதி ஹொரணை ரைகம பகுதியில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இந்நபர் 2002 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் தலைமறைவாகி இருந்துள்ள இந்நபரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் றைகம பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த நபர் இவ்வருடம் அப்பகுதி கிராம சேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து ரைகம பகுதியில் வசிப்பதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கமைய ஓய்வுபெற்றுள்ள குறித்த கிராம சேவகரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அதேபோல கடந்த 19 ஆம் திகதி புலிகள் அமைப்பில் கடற்புலியாகவிருந்த திருநாவுக்கரசு என்ற நபரும் கட்டுநாயக்காவில் இருந்து கட்டார் நோக்கி புறப்பட்டுச் செல்ல தயார் நிலையில் இருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நபரும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/74660.html

Geen opmerkingen:

Een reactie posten