[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 07:16.07 AM GMT ]
இவர்களில் 5 பேர் பெண்கள், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த ஒருவர் ஹொரணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
ஹொரணை ரைகம் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி சுப்ரமணியம் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இந்த சந்தேக நபரை போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பொதுமக்கள் இருக்கும் பிரதேசத்திற்கு அனுப்பியிருந்தனர்.
புலனாய்வு தகவல்களை திரட்டி சீர்குலைவு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவே சந்தேக நபரை புலிகள் அனுப்பியுள்ளனர்.
போர் முடிவடைந்த பின்னர், கடந்த வாரம் வரை இந்த சந்தேக நபர் ரைகம் தோட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்த நபர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ரைகம் தோட்ட பிரதேசத்தில் உள்ள கிராம சேவகருக்கு 500 ரூபா இலஞ்சம் கொடுத்து, சந்தேக நபர் ரைகம் தோட்டத்தில் வசித்து வருவதாக காட்டும் தேசிய அடையாள அட்டையை 2004 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ளார்.
சந்தேக நபருக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்த கிராம சேவகரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp6.html
மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 07:33.33 AM GMT ]
பொதுபல சேனா அமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசியமான வங்கி கணக்கின் ஊடாக பணம் கிடைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டவர்கள், சர்வதேச உறவுகளை அழிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்வதாகவும் அந்த சூழ்ச்சியின் பின்னால் எந்த சக்தி இருக்கின்றது என்பதை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இரகசிய வங்கி கணக்கின் மூலம் பொதுபல சேனாவுக்கு பணம் கிடைப்பதற்காக தான் இதற்கு முன்னரும் குற்றம் சுமத்தியிருந்தாகவும் இதனை தான் நாடாளுமன்றத்திலும் கூறியதாகவும் மங்கள குறிப்பிட்டிருந்தார்.
தமக்கு இவ்வாறு கிடைக்கும் பலத்தை பயன்படுத்தி பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற அமைப்புகள் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் முஸ்லிம் பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மக்கள் மீது கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் சட்டத்திற்குள் சிக்காது இருந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,
மங்கள சமரவீர அடுத்த தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை எதிர்ப்பார்த்து சில கணக்குகளை போட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இனங்களுக்கு இடையில் விரோதத்தை உண்டு பண்ணி வருகிறது எனவும் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp7.html
இலங்கைக்காக எப்போதும் குரல் கொடுப்போம்: மாலைதீவு ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 07:53.26 AM GMT ]
சர்வதேச தளத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் மாலைதீவு அரசாங்கம், இலங்கைக்காக குரல் கொடுக்கும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை தொடர்ந்தும் பாதுகாத்து கொள்ள அர்ப்பணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றாக இணைந்து செயற்படுதன் மூலம் பிராந்தியத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளை காணமுடியும் எனவும் மாலைதீவு ஜனாதிபதி கூறியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ பயணமாக மாலைதீவு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் யாமீன் அப்துல் கையூமுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போதே மாலைதீவு ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச தளத்தில் மாலைதீவு இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்து கொண்டார். அத்துடன் மாலைதீவில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnqz.html
சம்பூர் பிரதேசத்தை தமிழர்கள் மறந்து விட வேண்டியதுதான்!: அமைச்சர் பவித்ரா
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 08:19.00 AM GMT ]
மின்கட்டணத்தை அளவிடும் டிஜிட்டல் மீட்டர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பவித்ரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பூர் பகுதியில் திட்டமிட்டபடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தடையின்றி பெற்றுத் தருவதற்கும் இவ்வாறான செயற்திட்டங்கள் அவசியமானது.
இதன் காரணமாக அப்பகுதியில் குடியிருந்த சிலர் இடம்பெயர நேர்ந்துள்ளது உண்மைதான். எனினும் அவர்கள் மாற்று இடங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் சம்பூர் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடாது. நாட்டின் அபிவிருத்திக்காக இது போன்ற விட்டுக் கொடுப்புகள் அவசியம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnq1.html
Geen opmerkingen:
Een reactie posten