தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

கொடிகாமம் வெற்றுக்காணியில் ஆயுதங்கள் மீட்பு



பொதுபலசேனாவின் அடுத்த இலக்கு கொழும்பு?
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 09:08.34 AM GMT ]
கொழும்பில் முஸ்லிம்களின் வர்த்தகத்தைக் குறிவைத்து பொது பல சேனா அமைப்பின் அடுத்த கட்டத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயத்தில் இன்னொரு இனக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது பல சேனா திட்டமிட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 29ந் திகதி கொழும்பில் பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“உங்கள் பிரதேசத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுக்க முன்வாருங்கள்” என்ற தலைப்பில், இந்த செயலமர்வு கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து தேரர்கள் மற்றும் பொதுபல சேனா ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செயலமர்வின் பின்னர் கொழும்பின் முக்கிய பகுதியொன்றில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவும் பொது பல சேனா அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன் போது வன்முறைகளைத் தூண்டிவிட்டு இனக்கலவரமொன்றை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnq6.html
டெங்கு நோய் அபாயம்: வீதியில் குப்பை போட்ட எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்கு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 08:48.14 AM GMT ]
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளில் குப்பைகளை வீசியெறிந்த சுமார் எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றை வரை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான புகார்கள் எட்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதன் பேரில் எட்டாயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று பொலிஸ் திணைக்களத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இ்வ்வாறான சம்பவங்கள் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களும் அதிகளவில் பரவும் அபாயம் காரணமாகவே வீதிகளில் குப்பை வீசுகின்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குயிண்டஸ் ரேமண்ட் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnq4.html

 
கொடிகாமம் வெற்றுக்காணியில் ஆயுதங்கள் மீட்பு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 09:31.36 AM GMT ]
கொடிகாமம் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம்,கெற்பேலி மேற்குப் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து 6 கைக்குண்டுகள், மகசீன் ஒன்று, துப்பாக்கி ரவைகள் என்பன இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
விவசாய நடவடிக்கைக்காக வெற்றுக் காணி ஒன்றைத் துப்புரவு செய்த சமயம் வெடிபொருள்கள் தென்பட்டுள்ளன. காணியைப் பண்படுத்தியவர் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலைத் தொடர்ந்து ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் ஆயுதங்களை மீட்டுள்ளனர். அவை பாதுகாப்பான முறையில் கிறீஸ் பூசப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnrz.html

Geen opmerkingen:

Een reactie posten