தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 december 2014

என்னை ஜெனிவாவுக்கு கொண்டு செல்ல சதி! முஸ்லிம் நாடுகளே காப்பாற்றுகின்றன!- காத்தான்குடியில் மஹிந்த



தேசிய அரசாங்கத்துக்கு ஜே.வி.பியின் உதவியை எதிர்பார்க்கும் ஐ.தே.கட்சி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 05:06.40 PM GMT ]
ஜே வி பியின் உதவியை எதிர்பார்ப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியான ஆதரவை தெரிவிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே ஜே.வி.பி அறிவித்துள்ளது.
எனினும் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தின் அமைப்புக்காக ஜே.வி.பியின் உதவி கோரப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம். அவசரமாக உள்ள சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakw1.html
இலங்கைக்காக இரண்டு கடற்படை ரோந்துக் கப்பல்களை இந்தியா உருவாக்கி வருகிறது!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 03:38.48 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கை கடற்படைக்காக இரண்டு கப்பல்களை இந்தியா கட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இதுவரை மிக அரிதாகத்தான் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
தற்போது முதல் முறையாக போர்க் கப்பல் ஒன்றை வெளிநாடு ஒன்றுக்கு இப்போது ஏற்றுமதி செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ரோந்துக் கப்பலை மோரிசியஸ்சுக்கு அளிக்கும் நிகழச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், இரண்டு ரோந்துக் கப்பல்களை இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்க இலங்கை கோரியுள்ளதாகவும், அந்தக் கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுபமதி செய்யப்படும் இக்கப்பல்கள் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கு அந்நிய நாடுகளின் ஒப்புதல் ஏதும் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு, தொழில்நுட்பத்தைப் பெற்று நவீன ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார்.
மேக் இன் இந்தியா என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப, ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட சில ஆயுதங்களுக்கு ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.
இருந்தும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது அரசியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலான காரியமாக இருக்கும் என்று நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அர்ஜுன் டாங்கி, இலகு ரக போர் விமானம் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் இந்தியாவிலேயே இன்னும் படையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலாட் படை வீர்ர்கள் பயன்படுத்துவதற்காக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இன்சாஸ் துப்பாக்கியின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்று இராணுவம் கூறுகிறது.
இந்நிலையில் இந்தியத் தயாரிப்புகளை மூன்றாம் உலகில் உள்ள சிறிய நாடுகளுக்குத்தான் இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது.
அதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக இலங்கையின் போரின் இறுதிக் கட்டத்தின் போது இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற குரல் பலமாக தமிழகத்தில் எழுந்தது.
அதையடுத்து அப்போதைய மத்திய அரசு தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது.
தற்போது வியட்நாம் இந்திய ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது., ஆனால் வியட்நாமுடனான இராணுவ ஒத்துழைப்பு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா இந்த விடயத்தில் மெதுவாகவே பயணிக்கிறது
http://www.tamilwin.com/show-RUmszCRUKakwz.html
எதிரணி பொதுவேட்பாளரை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு?
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 03:22.50 PM GMT ]
ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தவிர ஏனைய ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்தத் தகவலை கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்ததை தலைவர் ஹக்கீம் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு கட்சித் தலைவருக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வந்த போதிலும், கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த குரலினாலும் அசையாத நிலைப்பாட்டின் மூலமும் அந்த சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும் கட்சியின் போராளிகளினதும், கல்விமான்கள், கட்சியின் அபிமானிகளின் கோரிக்கைக்கு அமைவாகவும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் முடிவை கட்சி நாளை பகிரங்க அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakwy.html
மூதூரில் மரத்தில் மோதிய தனியார் பேருந்து! 6 வயது சிறுவன் பலி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 03:18.09 PM GMT ]
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூரில் இன்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆரையம்பதியிலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலாவுக்காகச் சென்று விட்டு, ஆரையம்பதி நோக்கி திரும்பி வரும் வழியில் மூதூர் அன்சில் ஹொட்டலுக்கு முன்பாக உள்ள மரம் ஒன்றில் இப்பேருந்து மோதியுள்ளது.
இதன்போது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சாரதி மூதூர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  விபத்து மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv7.html

என்னை ஜெனிவாவுக்கு கொண்டு செல்ல சதி! முஸ்லிம் நாடுகளே காப்பாற்றுகின்றன!- காத்தான்குடியில் மஹிந்த
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 02:44.05 PM GMT ]
வசதி படைத்த முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் கடமையை நிறைவு செய்கின்றனர். வறிய மக்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு தடவை கூட இல்லாமல் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆகவே இனி வரும் காலங்களில் ஹஜ் கடமைக்குரிய காலத்தை விடவும் மேலதிகமாக கடமை நிறைவேற்ற செல்கின்ற தனவந்தர்கள், ஏழைகள் இரண்டொருவரை ஹஜ் கடமைக்கு கூட்டி செல்ல முன் வரவேண்டும் என கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று காலை கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பெஷ்டர் றியாஸ் தலைமையில் கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
அந்த இருண்ட 30 வருட கால யுத்தத்தை என்னால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல முடியாதிருந்த அந்த யுகத்தை மாற்றி இன்று நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக பள்ளிக்கு செல்கின்றீர்கள். அன்று பள்ளிக்கு செல்ல நின்மதியில்லை இபாடசாலைக்கு பிள்ளைகள் செல்ல முடியாது அந்த இருண்ட யுகத்தை முறியடித்து. உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை சுட்டுக் கொலை செய்ததை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த இருண்ட யுகத்தை நீக்கி சுதந்திரம், நின்மதியைப் பெற்று தந்தேன்.
கடந்த காலத்தில் இந்த பிரதேசத்துக்கு பாரிய அபிவிருத்திக்கு பெருந் தொகை நிதி  ஒதுக்கீடு செய்தேன். ஏழை மக்களுக்கு பல வழிகளிலும் நான் உதவி வழங்கினேன். வரவு செலவு திட்டத்திலிருந்து கற்பத்திலிருக்கும் பிள்ளை முதல் கபுறரை சென்றோர் வரை ஏதோ வகையில் உதவி செய்துள்ளேன். 65 வயது வயோதிபருக்கும், வலது குறைந்தோருக்கும் பாரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
இந்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அரசுடன் இணைந்திருந்த காரணத்தினால் 480 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கி அபிவிருத்திகள் பல செய்யப்பட்டன. எந்த ஆதரவினையும் எதிர்பார்க்காமலே மக்களுக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கினேன். ஆனால் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன .
இன வாதம்இமத வாதம் பேசி நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதனை மக்கள் நம்ப வேண்டாம். மக்களுக்கு சுதந்திரம் அமைதியைப் பெற்றுக் கொடுத்ததற்காக என்னை ஜெனிவாவுக்கு கொண்டு போக சதி செய்கின்றனர். ஆனாலும் எனது நீதி நியாயமான நடவடிக்கைக்காக இஸ்லாமிய நேச நாடுகளே எனக்கு ஆதரவாக வாய் திறந்து குரல் எழுப்பியதை என்னால் மறக்க முடியாது. எனவே அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழ எல்லோரும் ஒன்று படுவோம் என அவர் அங்கு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்பிராச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு பிரதான உரையினை நிகழ்த்தினார்.
இப்பிராச்சார கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.ரஹ்மான், கல்முனை முகைதீன் ஜம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட பெருந்திராள மக்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா கடற்கரைப் பள்ளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளிலும், துஆப் பிரார்த்தனையிலும் கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளிலும் பாண்டிருப்பு துரௌபதையம்மன் ஆலயத்தற்கும், கல்முனை விகாரைக்கும் விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakv6.html

Geen opmerkingen:

Een reactie posten