தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

கிளிநொச்சியில் மகிந்தருடன் கீதாஞ்சலி ஆட்டம்…

மைத்திரியும், கூட்டாளிகளும் மகிந்தரின் கண்காணிப்பிலாம்

“மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து சிறப்புக்கவனம் செலுத்தி அவதானிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டவர்கள் அண்மையில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் இரகசியங்கள் விரைவில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இவர்கள் எங்கு தங்கியிருந்தனர், யார் யாரைச் சந்தித்தனர், என்னென்ன கலந்துரையாடப்பட்டன, என்பன விரைவில் பகிரங்கப்படுத்தப்படும். நவம்பர் 2ம் நாளுக்குப் பின்னர், இவர்கள் சிங்கப்பூரில் ஒரே விடுதியில் வெவ்வேறு காலப்பகுதிகளில் தங்கியுள்ளனர், ஒரே குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள ஒரு விடுதி அல்லது இரண்டு விடுதிகளுக்கு இதே காலப்பகுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆறு பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்கள் கொடுக்கும் டொலர்களுக்காக எதிரணியினர் நாட்டுக்குத் துரோகம் செய்ய முனைகின்றனர்.
மைத்திரிபால சிறிசேன ஒரு அசிங்கமான நிர்வாகி. ஒரு அமைச்சையே நிர்வகிக்கத் தெரியாதவர் எவ்வாறு நாட்டை நிர்வகிக்கப் போகிறார். மகாவலி அபிவிருத்தி அமைச்சை இவர் சரியாக நிர்வகிக்காததால் தான், மொரகஹகந்த, யான்ஓயா திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் திரும்ப நேரிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90669.html

பதட்டத்தில் முல்லைத்தீவில் உலறிய மகிந்த

“ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாடுகளின் இன்றைய நிலையை பாருங்கள். அந்த நிலை சிறிலங்காவில் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குத் திரும்பிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். நாங்கள் 30 ஆண்டுகள் போருக்குள் இருந்து விட்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.
நாங்கள், இன, மத,மொழி ரீதியாக பிளவுபட்டு நின்றால் முன்நோக்கிச் செல்லமுடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் நாம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறோம். மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வாய்ப்பளித்திருக்கிறோம். வடக்கில் அரசாங்கம் வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகளைப் புனரமைத்துள்ளது. தமிழ்மக்கள் தவறான பரப்புரைகளுக்கு பலியாக கூடாது. சிறிலங்கா அரசாங்கம் எல்லா இலங்கையர்களையும் சம்மாகவே நடத்துகிறது, இனரீதியாக பிரித்துப் பார்க்கவில்லை.

அதிபர் தேர்தல் நாடு முழுவதற்குமானது. மக்கள் அதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். மூன்றாவது பதவிக்காலத்துக்கு நான் தெரிவு செய்யப்படுவதற்கு தமிழ்மக்கள் உதவ வேண்டும்.” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே கிளிநொச்சியில் சற்று முன்னர் சிறிலங்கா அதிபரின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.Maginta-001
http://www.jvpnews.com/srilanka/90672.html

கிளிநொச்சியில் மகிந்தருடன் கீதாஞ்சலி ஆட்டம்…

KelenoseKelenose-01

குறிப்பாக சுதந்திரக்கட்சி கிளி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்துவரப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களைச்சார்ந்த உத்தியோகத்தர்களும் மகிந்தவுக்காக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மகிந்தவின் வருகையைத்தொடர்ந்து கிளி நகர் எங்கும் பொலிசாரும் இராணுவத்தினரும்; குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/90675.html

Geen opmerkingen:

Een reactie posten