தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்

வவுனியா புளொட் இராணுவப் பொறுப்பாளர் சிவா என்பவரே எனது கணவரை கடத்தினார்! கண்ணீருடன் மனைவி
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 11:54.44 PM GMT ]
காணாமல் போன எனது கணவர் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தால் பெண் என்று பார்க்காது உன்னை கடத்துவேன். பணம் தந்தால் கணவரை விடுவிப்பேன் என புளொட் அமைப்பின் முன்னாள் இராணுவ பொறுப்பாளர் சிவா தன்னை மிரட்டினார் என்று சிவானந்தம் ஜெனிதா சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் சாட்சியமளிக்கையில்,
மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008 மே 19 அன்று சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் (வயது-30)  வவுனியா நகருக்கு வந்த போது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டார் என்று எனக்கு தகவல் கிடைத்தது.
கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியா நகர குறியீட்டுடன் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து உனது கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால், அவர் கொழும்புக்கு வேலைக்குப் போய் விட்டார் என்று கூறுமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கணவனை விடுவிப்பதற்கு 50 லட்சம் ரூபா பணம் தருமாறும் கோரினார்கள். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்த போது 10 லட்சம் கேட்டார்கள். அதுவும் இல்லை என்று கூறினேன்.
கடைசியாக 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் கேட்டார்கள். குறித்த பணத்தொகையை வவுனியா நகரில் வைத்து என்னிடம் ஒருவர் வாங்கி சென்றார். ஆனால் இன்று பணமும் இல்லை, கணவரும் இல்லை, இரு பிள்ளைகளுடன் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.
என்னிடம் பணம் பறித்தவர்கள் தம்மை கருணா குழு என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் எனக்கு அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை விசாரித்துப் பார்த்த போது அது புளொட் இயக்கத்தின் இறம்பைக்குளம் அலுவலக இலக்கங்கள் என அறிந்தேன்.
அதன் பின்னர் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த சிவாவிடம் நான் சென்று கேட்ட போது, கணவர் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் பெண் என்றும் பார்க்காமல் உன்னை கடத்துவேன் என அவர் மிரட்டினார்.
இதன் பின்னர் சிவா 28 லட்சம் பணம் தந்தால் உனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றேன் என தெரிவித்தார். ஆனால் கணவரை காட்டவில்லை.
சில காலம் கழித்து சிவாவை நேரில் கண்டு கேட்ட போது தான் சிறை சென்று வந்துள்ளார் என்றும், தனக்கு தற்போது எதுவும் தெரியாது எனவும் கூறினார். நானும் அவர்கள் மேல் உள்ள பயத்தால் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யவில்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalp5.html
தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 01:17.26 AM GMT ]
தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வேட்பாளர்களும் சிங்கள மக்களின் வாக்குகளை கவரும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழர்களுக்கான தீர்வு ஒன்றை சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாது போனால் நிலைமை மோசமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுத்தல் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியேற்றல் என்பன இதில் முக்கியமான ஆரம்ப கோரிக்கைகளாகும்.
இந்தநிலையில் தமிழகம் சென்றுள்ள தலைவர் ஆர்.சம்பந்தன் வந்த பின்னரே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalqz.html
இலங்கையில் பாகிஸ்தானியர் இருவருக்கு மரண தண்டனை
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 03:00.40 AM GMT ]
1560 கிராம் ஹெரோய்ன் போதைவஸ்துவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதியன்று இவர்கள் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா மரண தண்டனை தீர்ப்பளித்தார்.
மெக்மாப் குமார் மற்றும் பாஸாட் நசார் ஆகியோருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszCScKalq0.html

Geen opmerkingen:

Een reactie posten