[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 05:13.21 AM GMT ]
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தினால் கட்டியெழுப்பபட்ட அரச வளங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்கட்சி திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த அரசாங்கம் அரச சேவையாளர்களை 3 லட்சமாக மட்டுப்படுத்தவிருந்தது. எனினும், இதனை நாங்கள் 15 லட்சமாக அதிகரித்து அரச சேவையை வலுப்பெற செய்துள்ளோம்.
நாங்கள் அரச சேவை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
இன்று இலங்கையை சிங்கப்பூர் முறைமைக்கு மாற்றப் போவதாக தெரிவித்து வருகின்றனர்.
இதன் மூலம் அரச வளங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளமை நன்றாக விளங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks6.html
ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:22.41 AM GMT ]
கொழும்பில் நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நியாயத்தை நிறைவேற்ற போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசரும், முன்னாள் இராணுவத் தளபதியும் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவருக்கு நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt1.html
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிக்கு மரண தண்டனை
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 08:29.45 AM GMT ]
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை விதிக்கப்பட்டிருந்த வைத்தியர் உஸ்மான் மற்றும் அர்ஷத் மெஹ்மூத் ஆகிய இரு தீவிரவாதிகளுக்கு, வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்ட ஒருவரான வைத்தியர் உஸ்மான், இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் வீரர் என்பதோடு, 2009 ல் ராவல்பிண்டி இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-ஜாங்வியின் உறுப்பினராவார்.
மேலும் 2009ம் ஆண்டு லாகூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி எனவும் இவர் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றையவரான அர்ஷத் மெஹ்மூத், பர்வேஸ் முஷாரஃப்பை 2003ம் ஆண்டு படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர். அத்துடன் தீவிரவாத இயக்கம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt7.html
முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஜோன் அமரதுங்கவுடன் சந்திப்பு!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 08:38.55 AM GMT ]
இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனவரி 8 ஆம் திகதி கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளின் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்கள், முன்னாள் பிரிகேடியர்கள், மற்றும் தளபதிகள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் சில அரசியல்வாதிகளின் ஏவுதாலின் பேரில் ஆளும் கட்சியின் குண்டர்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குல்களுக்கும், இடையூறுகளுக்கும் உள்ளாகலாம்.
தேர்தல் நாளில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வன்முறைகள் உச்ச நிலையை அடையும் என எதிர்க்கட்சி அச்சம் கொண்டுள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜோன் அமரதுங்க பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அனுபவங்களை கொண்டவர் என்பதுடன் கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜோன் அமரதுங்க, ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியிருந்த சூழ்நிலையில் இந்த விடயம் நடைபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற போவதாக வெளியான வதந்திகளை அமரதுங்க மறுத்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakuy.html
சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஈபிடிபியினர்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 08:41.00 AM GMT ]
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவியும் ஈபிடிபியினரால் எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கூட்டமைப்பினரே காரணமெனவும் அவர்களைக் கைது செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான கோசங்களை எழுப்பியதுடன், பொலிசாரிடம் மகஜரையும் கையளித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈபிடிபினரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakuz.html
தேர்தலில் அக்கறை செலுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியா!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 08:51.13 AM GMT ]
சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான சூழலை இல்லாமல் செய்யாது அதனை பாதுகாக்க உரிய முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த ராஜதந்திர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
புதுடெல்லியில் இருந்து கிடைத்த செய்தியை இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு அறிய தந்துள்ளார். அமெரிக்க அரசின் செய்தியை அந்த நாட்டு தூதுவர் அரசாங்கத்தின் உயர் செயலாளர் ஒருவரிடம் வழங்கியுள்ளார்.
குறிப்பாக வடக்கு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவிக்கின்றன. நட்புறவு ரீதியான ராஜதந்திர செய்தியாக இந்நாடுகள் தமது இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku0.html
Geen opmerkingen:
Een reactie posten