சிங்கப்பூரில் சந்திப்பு நடந்ததா? சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில்கூறிக் கொண்டிருக்க முடியாது!- நா.க.த.அரசாங்கம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 02:30.44 PM GMT ]
அனைத்துலக விசாரணையின் முடிவுகள், பொதுசன வாக்கெடுப்புக்கான சூழலை ஏற்படுத்துதல் என, தமிழின அழிப்புக்கு பரிகார நீதியினைப் பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலிலை வகுத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா அரசின் தேர்தல் மேடை முழக்கங்களுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என நா.க.த.அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியினர் சிங்கப்பூர் சென்றிருந்த வேளை, நாடுகடந்த தமிழிழ அரசின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர் என்ற சிறிலங்காவின் ஆளும் அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கூட்டாக கொழும்பில் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் அரசின் அமைச்சர்களின் இக்கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்கூறிய கூற்றினைத் தெரிவித்திருந்ததோடு, தேர்தல் நாள் நெருங்கநெருங்க இவ்வாறான விடயங்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதனை நாம் எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைத்து, இலங்கையில் தமிழீழம் அமைக்கப் போராடுகின்றனர் என சிங்கள மக்களுக்கு பயங்காட்டி வாக்குச் சேகரிக்கும் சிங்கள அரசியல் தரப்பினரது கருத்துக்கள், தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பிரித்தானியாவில் சிங்கப்பூரில் சந்திப்புக்களை எதிரணியினர் நடத்தினர் என்ற பொய்ப்பிரச்சாரங்கள் ஆகியன, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அச்சத்தினை வெளிப்படுத்துகின்றது.
தமிழீழத் தாயகத்தில் உருவாக்கப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக 2009ல் அழித்துவிட்டதாக சிங்களப் பேரினவாதம் மார்தட்டிய வேளை, தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிங்களதேசத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்பதனை இது வெளிக்காட்டுகின்றது.
ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி யவர்கள் என்ற வகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய தலைவர் மகிந்த ராஐபக்ச, முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் இராணுவத்தளபதி சரத் பெண்சேகா உட்பட பன்னிருவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, இனப்படுகொலையாளிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சில மாதங்களுக்கு அறிவித்திருந்தும் உள்ளது.
அனைத்துலக விசாரணையின் முடிவுகளை எவ்வாறு சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கையாள்வது, பொதுசன வாக்கெடுப்புக்கான சூழலை ஏற்படுத்துவது என தமிழின அழிப்புக்கு பரிகாரநீதியினைப் பெறுவதற்கான எமக்கான நிகழ்ச்சி நிரலிலை வகுத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் சிறிலங்கா அரசின் தேர்தல் மேடை முழக்கங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo0.html
தமிழின அழிப்பினை சான்றுகளோடு பதிவு செய்துள்ள பெரும் ஆவணம் கனேடிய மண்ணில் அறிமுகம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 03:02.32 PM GMT ]
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள் 'SRI LANKA: HIDING THE ELEPHANT’ ' எனும் பெயரில் இதனை பதிவு செய்துள்ளார்.
கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்;த இந்நூல் அறிமுக நிகழ்வினை கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார்.
நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இந்நிகழ்வில் நேரடியாக பங்கெடுத்து ஆர்வலர்களுக்கு புத்தகங்களை வழங்கியிருந்ததோடு சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.
ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
இந்நூல் ஏற்கனவே சென்னையிலும் ஜெனீவாவிலும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo1.html
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவைத்தலைவர் பதிலடி!
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 03:42.48 PM GMT ]
மாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பும், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான விவாதமும் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாண சபைக்கு இலங்கையின் மற்றய மாகாணங்களை விடவும் அதிகளவு நிதியை, மத்திய அரசாங்கம் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்குப் பதிலளித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்துக்களில் தவறு உள்ளதாக கூட்டிக்காட்டியதுடன், இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் 6வது இடத்தில் இருப்பதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வரும் அரசாங்கம் மூலதனச் செலவில் 394மில் லியன் ரூபா நிதியினையும், மொத்த வரவு செலவு திட்டத்தில் 900ம் மில்லியன் ரூபா நிதியினையும் குறைத்திருக்கின்றது. என சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் அதிகளவு நிதி மேல் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து தனது கருத்து பொய்த்துப்போன நிலையில் அவைத்தலைவர் சபையில் கருத்துக்கூற முடியாது என சபையில் கூச்சலிட்டார்.
இரண்டாம் இணைப்பு
வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் உரை
வடமாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் வடமாகாணத்திற்கு 17858.69 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஒரு கோடியே 58ஆயிரத்து 763 மக்கள் தொகை கொண்ட மாகாணத்திற்கு இவ்வளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டு ஒதுக்கீடுகள் தொடர்பில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை 2015 ம் ஆண்டுக்கென சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வட மாகாண சபையின் கட்டமைப்புகளினூடாக எமது 5 மாவட்டங்களின் பொருட்டும் ஆற்றப்படவுள்ள நடவடிக்கைகளுக்காக 2015 ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் அந்நிதியை நிதியீட்டம் செய்யும் வழிமுறைகள் தொடர்பாக இவ்விபரங்களை சமர்ப்பிக்க விழைகின்றேன்.
ரூபா 17858.69 மில்லியன் 2015 ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் எமது மாகாணத்திற்கு ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினத்திற்காக ரூபா 15123 மில்லியன் மூலதனச் செலவினத்திற்காக ரூபா 2735.69 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
1058762 மக்கள் தொகையைக் கொண்ட வடமாகாணத்திற்காக முதலமைச்சு மற்றும் 4 அமைச்சுக்கள் ஊடாகவும் ஏனைய மாகாண அலகுகள் ஊடாகவும் எமக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எம்மால் வழங்கக்கூடிய அதி உச்ச பலன்களை மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் இவ் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சுக்குமான வரவு செலவுத்திட்டம் தொடர்பான விரிவான உரை துறை சார் அமைச்சர்களால் வழங்கப்படும்.
எனது பொறுப்பிலுள்ள அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் தொடர்பாக பின்வரும் விடயங்களை சுருக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது அமைச்சிற்கு ரூபா 1713.35 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 1486.35 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும் ரூபா 227 மில்லியன் மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் திணைக்களத்தைப் பொறுத்த வரையில் ஒரு மாநகர சபைஇ5 நகர சபைகள் 29 பிரதேச சபைகள் ஊடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
வெவ்வேறு தலைப்புகளின் கீழ் உள்ளூராட்சி சபைகளினால் வழங்கப்படும் சேவைகளின் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூபா 1258.95 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும் ரூபா 156 மில்லியன் மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கீடு சௌய்யப்பட்டுள்ளது.
இச் சேவைகளைப் பொறுத்த வரையில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் நாம் பாரிய சவால்களை எதிர் நோக்குக்கிறோம். இதில் நவீன முறைகளை அறிமுகப்படுத்துவதில் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில் நாம் கவனம் செலுத்தவுள்ளோம்.
இந்த ஆண்டில் முத்திரை வரிகளை சேகரிப்பதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டதும் உள்ளூராட்சி சபைகளுக்கான வருமான மூலங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த மேலதிக வருமானங்களின் மூலம் அதிக பட்ச உள்ளூராட்சி சேவைகளை வழங்க இச்சபைகள் முன்வர வேண்டும்.
காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது.
பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். ஆயினும் பல தேவைகளின் பொருட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் எம்மால் மக்கள் நலன் கருதும் வகையிலேயே கையாளப்படுகின்றன.
2015 ம் ஆண்டிற்கு ரூபா 77.74 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும் ரூபா 5 மில்லியன் மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது நவீன இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி தரவுகளை சேகரிப்பதற்கும் அதன் மூலம் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கும் நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழிற்றுறைத் திணைக்களத்தினூடாக தொழில் முனைவோருக்கான பயிற்சிகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த இத்திணைக்களத்தினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதிலும் மாவட்டச்செயலகம் பிரதேச செயலகங்களினூடாகவே இத்திணைக்களம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. மீண்டுவரும் செலவினத்திற்காக ரூபா 77.55 மில்லியனும் ரூபா 14 மில்லியன் மூலதனச்செலவினத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவுற்ற பின்னர் எமது மாகாணத்திற்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அதனை எமது மக்களுக்கு நன்மை தரும் துறையாக விருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாகாண உல்லாசப் பயணச்சபை ஒன்றை அமைப்பதற்கான நியதிச்சட்டம் வரையப்பட்டு சட்ட வல்லுனர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சபை அமைக்கப்பட்டதும் உல்லாசப் பயணத்துறை எமது கலாச்சாரத்தை புண்படுத்தாத வகையில் மேம்படுத்தப்படும். இதற்காக ரூபா 36 மில்லியன் மூலதனச்செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு என்ற தலைப்பின் கீழ் அடையாள ஒதுக்கிடு 2014 ம் ஆண்டில் வழங்கப்பட்டது. 3 மில்லியன் அளவிலான அத்தொகையைக் கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை தெரிவு செய்து வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இதற்கான நியதிச்சட்டம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதும் மேலதிக நிதி மூலங்கள் மூலம் மேலும் வீடமைப்பு துறை மேம்படுத்தப்படும். இதற்கு ரூபா 5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் 2015ம் ஆண்டில் விவசாய அமைச்சுடன் இணைத்துகொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு ரூபா 133.12 மில்லியன் மீண்டு வரும் செலவினத்திற்கும் ரூபா 6 மில்லியன் மூலதன செலவினத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை திணைக்களம் ஆகியன சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவற்றிற்கு முறையே ரூபா 323.26 மில்லியன் ரூபா 114.84 மில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்கும் ரூபா 22 மில்லியன் ரூபா 28 மில்லியன் மூலதனச் செலவினத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் தெரிவு செய்கின்ற முன்னுரிமைகள் நிதி ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்படாத காரணத்தினால் நாங்கள் மாற்றுத்திட்டங்களுக்கு சென்றமை காரணமாக நவம்பர் மாதத்தில் கூட வேலையை தொடங்க நேரிட்டுள்ளது.
2014ம் ஆண்டில் மூலதன வேலைத்திட்டங்களை அடையாளம் காணல் அமுல்படுத்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட தாமதங்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு 2015 இல் அவை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo2.html
கிளிநொச்சியில் பிக்கப் வாகனத்தை மோதித் தள்ளியது ரயில்: நால்வர் படுகாயம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 04:06.05 PM GMT ]
குறித்த விபத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குறுந்தூர புகையிரதம் கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி, உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo3.html
பொதுபல சேனாவுக்குள் முரண்பாடு?
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 05:02.48 PM GMT ]
பொதுபல சேனாவுக்குள் முரண்பாடுகள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பதவியில் இருந்து அகற்ற கட்சிக்குள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை கட்சியின் நிறைவேற்று பணிப்பாளர் திலந்த விதானகே மறுத்துள்ளார்.
தமது கட்சிக்குள் எவ்வித பிரிவினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பொதுபலசேனா, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நிலையில் சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo5.html
ஜோன் அமரதுங்கவின் முக்கிய தீர்மானம் என்ன?
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 05:08.30 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க, எதிர்வரும் 25ஆம் திகதியன்று முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அவர் அரசாங்கத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான போதும் அதனை அவர் மறுத்திருந்தார்.
அவர் தற்போது முக்கிய செய்தியை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த செய்தி தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை.
இதற்கிடையில் கடந்த வாரம் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக வத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜோன் அமரதுங்க பங்கேற்றார்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo6.html
மன்னார் செல்லும் வழியில் கண்ட காட்சி
நேற்று செவ்வாய்கிழமை (16.12.2014) மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 500க்கும் அதிகமான இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பொதுமக்கள் சிலாபத்துக்கு அழைத்து வரப்பட்டதால் கொழும்பு புத்தள வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
http://www.jvpnews.com/srilanka/90600.html
சந்திரிக்காவை பிரதமராக்க மைத்திரி இரகசிய திட்டம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 10:41.28 PM GMT ]
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றி;ல் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுவேட்பாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கொண்டுள்ள உடன்பாடு அபாயமானது என்றும் திஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKalo7.html
Geen opmerkingen:
Een reactie posten