தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 december 2014

வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள்: சம்பிக்க

யாழ்தேவி காங்கேசன்துறை வரை-- 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 09:26.54 AM GMT ]
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இந்தச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் ரயில் பாதைப் புனரமைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait0.html
திஸ்ஸவுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக மைத்திரிபால அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 08:34.57 AM GMT ]
அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தானும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் நேற்று ஆற்றிய உரைக்கு எதிராகவே வழக்குத் தொடரவுள்ளதாக குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு மைத்திரிபால தெரிவித்தார். 
திஸ்ஸ அரசின் தாளத்துக்கு ஆடுவதாகவும், தானும் ரணிலும் எப்போதும் திஸ்ஸ குறிப்பிட்டது போன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தமொன்றைச் செய்யவில்லை.
மட்டுமன்றி, திஸ்ஸ சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும், அதில் போடபட்டிருக்கும் தனதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கையெழுத்துக்கள் போலியானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaitz.html
ஜனாதிபதியின் கூட்டங்களை மேர்வின் புறக்கணிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 07:55.25 AM GMT ]
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் பிரசாரக் கூட்டங்களை புறக்கணிக்கப் போவதாக மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதியையே எதிர்வரும் தேர்தலில் தான் ஆதரிக்கப் போவதாகவும், தன்னிடமிருந்த களனி தொகுதி அமைப்பாளர் பதவி சாலித விஜேசுந்தரவுக்கு வழங்கப்பட்டது கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaity.html
புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வேன் என்கிறார் மகிந்த
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 07:51.14 AM GMT ]
தனது மூன்றாவது பதவிக் காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதி செய்வதுடன், புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச உறுதியளித்துள்ளார்.
இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனைவரினதும் ஆதரவுடன் நான் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவேன்.
ஏனைய கட்சிகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. மஹிந்த சிந்தனை என்ற ஒன்று மாத்திரமே எனது நிலைப்பாடு. இது தேர்தலுடன் மறக்கப்படும் வாககுறுதியல்ல எனவும் குறிப்பிட்டார்.
நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே.- எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais7.html
வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள்: சம்பிக்க
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 07:26.57 AM GMT ]
வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட மாட்டார்கள் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கின் இராணுவ முகாம்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்படும் என அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் பிழையானது.
அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது பிழையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலோ உடன்படிக்கையிலோ 50 வீதம் இராணுவ முகாம்கள் வடக்கில் குறைக்கப்படும் என உறுதியளிக்கப்படவில்லை.
அரசாங்கம் பிழையானதும் பொய்யானதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிட்டகோட்டே பொலிஸ் அரங்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மைத்திரிபால சிறிசேன செய்து கொண்ட உடன்படிக்கையில் வடக்கில் 50 வீத இராணுவ முகாம்கள் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKais6.html

Geen opmerkingen:

Een reactie posten