[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 03:57.56 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவை செயலிழக்க செய்யும் வகையில் இந்த கட்சி உருவாக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த கட்சி உருவாக்கம் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரசாரங்களுக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமது கட்சியின் தேசியநிலை உறுப்பினர்கள் எவரும் கம்மன்பிலவுடன் இணையமாட்டர்கள் என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பொதுபலசேனாவுடன் இணைந்து அரசியல் கட்சியை கம்மன்பில உருவாக்கினால் அவரே அதன் தலைவராக செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmszCScKalq3.html
பிரிவினைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நாட்டு மக்கள் வழங்கும் உறுதியான பதிலாக இம்முறை தேர்தல் அமையும்: மஹிந்த
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 05:00.55 AM GMT ]
பாணந்துறையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி-
பிரிவினைவாதிக்கும் பயங்கரவாதிகளுக்கும் நாட்டு மக்கள் வழங்கும் உறுதியான பதிலாக இம்முறை தேர்தல் அமையும். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து நாம் இல்லாதொழித்தாலும் வெளிநாடுகளில் பயங்கரவாதம் தொடர்கிறது. பயங்கரவாதிகள் சர்வதேசத்திலிருந்து இயங்கி வருகின்றனர். தனியான பாராளுமன்றத்தை அமைத்துக் கொண்டு அதற்கு அமைச்சரவையையும் நியமித்து செயற்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும்.
நாட்டிற்கு எதிராகச் செயற்பட்டு அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்திலும் நாம் மிக அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியாகும்.
நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளோம். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு நாம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு மக்களின் பூரண ஆதரவு அவசியம்.
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டமாகும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalq4.html
Geen opmerkingen:
Een reactie posten