முன்னாள் JVP உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான "லொக்கு அத்துள" மகிந்தரின் அலரி மாளிகையில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் எதிரணிய மைத்திரிபால பக்கம் செல்லவிருந்த நிலையில், அவரை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்தவேளை அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், இருப்பினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே மரணித்துவிட்டதாகவும், ஆங்கில ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னரும் இதுபோன்ற பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்றே இச்செய்தியையும் வெளியிட்டுள்ளதால் சிங்கள மக்களுக்கு மத்தியில் பெரும் குழப்பம் தோன்றியுள்ளது என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை என்று அழைத்து அதிக மதுபோதையைக் கொடுத்து திட்டமிட்டு அவரைக் கொன்றார்களா ? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விஜயமுனி தேவகே நிமால் ஜெயசிங்க என்ற "லொக்கு அத்துள" ஜே.வீ.பி.யின் 1971 காலத்தில் இருந்து முக்கிய இடத்தில் (4 ஆவது இடத்தில்) இருந்து அந்த அமைப்பை வழிநடத்தியவர் ஆவர்.
அதுபோக மிகவும் திடகாத்திரமானவர். அவர் புகழ்பெற்ற கராத்தே வீரரும் ஆவார். ஜே.வீ.பி.யில் இருந்து விலகி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த இவர் எரிபொருள் சக்த்தி இணை அமைச்சராக பதவி வகித்தவர். தற்போதைய கம்பகா மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். ஆனால் சுதந்திரக் கட்சியில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இவர் அதில் இருந்து விலகி எதிரணியான, மைத்திரிபால அணிக்கு செல்ல இருந்த நிலையில் தான் இவரது இறப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:
Een reactie posten