தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 december 2014

மீரியபெத்த மக்களுக்கு புதிய வீடுகள்: கோத்தபாய தலைமையில் ஆரம்பம்

ஆளும் கட்சியில் இருந்து அதிரடியாக ஹிருணிகா நீக்கம்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 11:25.00 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அங்கத்துவத்தை ஆளும் கட்சி இரத்துச் செய்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக கடிதம் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஹிருணிகா தனது பேஸ்புக் கணக்கில் சேர்த்துள்ளார்.
நாங்கள் கட்சியை விட்டு செல்லவில்லை. உங்களது ஊழல் ஆட்சியை விட்டே சென்றோம் என ஹிருணிகா அதில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalt1.html

மீரியபெத்த மக்களுக்கு புதிய வீடுகள்: கோத்தபாய தலைமையில் ஆரம்பம்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 11:47.33 AM GMT ]
கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பண்டாரவளை பூணாகலை தோட்டத்தின் மாகந்த மல்லவவத்தை பிரதேசத்தில் இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 75 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட உள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
  
 
 
 
  
http://www.tamilwin.com/show-RUmszCScKalt4.html

Geen opmerkingen:

Een reactie posten