இந்த இராட்சத பிளவு அரை மைல் நீளமும் சில இடங்களில் 26-அடிகள் ஆழமும் கொண்டு காணப்படுகின்றன என Sky News செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விரிசல் சில இடங்களில் 16-அடிகள் ஆழமாகவும் காணப்படுகின்றன. வாகன சாரதிகள் அவ்விடத்தை சுற்றி வருவதற்கு நீண்ட சுற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படடுள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப் பாரிய பிளவிற்கான காரணம் தெளிவாகவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பிளவு பட்டிருக்கலாம் அல்லது ஒரு கசியும் கடல் அலை தடுப்பு தரை இடிந்து விழ காரணமாக இருந்திருக்கலாம் என நிலஅளவையாளர்கள் நம்புவதாக கூறப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten