யாழில் புகை மூட்டம்! எரிமலை வெடிப்பா??
யாழ் மாநகரசபை ஆணையாளர் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர் என மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பதவிக்கு வந்த புதிதில் ஜீ.பி.எஸ் சிஸ்டம் என்று கூறி அதிகாரிமார் பலருக்கு கைத் தொலைபேசி கொடுத்து நீங்கள் எங்கு நிற்கின்றீர்களோ அந்த இடம் எனக்கு இங்கே தெரியவரும். நான் இருந்த இடத்தில் உங்களைக் கண்கானிப்பதற்காகத் தான் இதைத் தருகின்றேன் என தெரிவித்து பலரையும் யோசிக்க வைத்தவர் யாழ் மாநகரசபை ஆணையார்.
தனது அலுவலர்களை கையாளும் யாழ் மாநகரசபை ஆணையாளர் யாழ் மாநகரத்தை சரியான முறையில் கையாள்வதில்லை என பலரும் குறைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறானவற்றை எரிக்கும் போது மக்கள் நடமாட்டமற்ற இரவில் எரிக்கலாம். அல்லது தகவல்தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள ஆணையாளர் கூகிளில் தேடியாவது இந்த விடயத்தைக் கையாளலாம். அதை விட்டு உழவு இயந்திரங்களுக்கு ஜீ.பி.எஸ். கருவி பூட்டுவது. ஊழியர்களுக்கு கைத் தொலைபேசி கொடுப்பது, புதிய கணனி மென்பொருட்களை வாங்கி பரீட்சித்துப் பார்ப்பது என்பவற்றைக் குறைத்து நகர முன்னேற்றத்தில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாநகரசபைக்குள் இருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உழவு இயந்திரத்திற்கு பெருமளவு பணத்தை விரையமாக்கி ஜீ.பி.எஸ் கருவி பூட்டி ஒவ்வொரு கருவிக்கும் மாதாந்தம் சில ஆயிரம் ரூபாக்களைச் செலவு செய்து உழவு இயந்திரச் சாரதியைக் கவனிப்பதைக் காட்டிலும் அந்த உழவு இயந்திரத்திற்கு மூடிய பெட்டி செய்து அதன் மூலம் சிறப்பான முறையில் கழிவை கொண்டு செல்லாம் என்பதை யாழ் மாநகரசபை ஆணையாளர் உணருதல் வேண்டும். யாழ் மாநகரசபை உழவு இயந்திரங்கள் தெருவால் வரும் போது சேறு பூசிய நிலையில் வரும் பண்றியைக் கண்டு பயந்து ஒதுங்குவது போல மக்கள் ஒதுங்குவதை யாழ் மாநகரசபை ஆணையாளர் அறிந்திருத்தல் அவசியம்.








http://www.jvpnews.com/srilanka/72195.html
மன்னார் பொது மயானத்திற்கு பின் குப்பைகள்
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின்பகுதியில் மன்னார் நகர் பகுதியில் உள்ள கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கழிவுப்பொருட்கள் எரியூட்டப்படுகின்ற போது வெளி வரும் மணம் மற்றும் புகைகளினால் அப்பகுதி மக்களுக்கு மூச்சித்தினரல் ஏறபடுவதாகவும் குறிப்பாக சிறுவர்கள்,வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக அந்த மக்கள தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களை வேறு இடங்களில் கொட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



http://www.jvpnews.com/srilanka/72212.html
கிழக்கு மாகாணத்தில் மகிந்தரின் ஆணைக்குழு
இந்த அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது.
ஆணைக்குழுவின் விசாரணை காத்தான்குடியில் நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று 59 பேரும், நாளை 53 பேரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை 54, 30 பேரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையில் 45 பேர் வரையானோரின் முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய விசாரணைகளின் போது அதிகமானவை குருக்கள் மடத்தில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பிலே விசாரிக்கப்பட்டன.
http://www.jvpnews.com/srilanka/72206.html
Geen opmerkingen:
Een reactie posten