தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

வட மாகாண ஆளுநர், அவைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்!



மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 07:19.17 AM GMT ]
கடந்த வியாழக்கிழமை முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தால் சம்பந்தமாக விசாரணை நடத்த, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
ஹர்த்தால் நடைபெற்ற தினத்தில் வெள்ளவத்தை நோ லிமிட் வர்த்தக நிலையம் உள்ளிட்ட முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு அழுத்தம் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக இன்று காலை புலனய்வுப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் குணசேகர என்பவர் தனக்கு அறிவித்ததாக முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற கொலைகள், சொத்து அழிவுகளுக்கு காரணமாக இருந்த பொதுபல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை சட்டத்திற்கு முன் கொண்டு வர பொலிஸாருக்கு அதிகாரமில்லை என பொலிஸ்மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஞானசார தேரருக்கு சட்டத்தை அமுல்படுத்த அதிகாரம் இல்லை எனக் கூறிய பொலிஸார், அமைதியான எதிர்ப்பு போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட முஜிபூர் ரஹ்மானுக்கு எதிராக சட்டத்தை கண்டுப்பிடித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet6.html
புனித பாப்பரசரின் ஆசீர்வாதத்தைப் பெறவுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்கள்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 07:17.44 AM GMT ]
வடக்கு கிழக்கில் யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களை புனித பாப்பரசர் நேரில் விஜயம் செய்து பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு  விஜயம் செய்யும் பாப்பரசர் வடக்கு, கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து, ஆசீர்வாதமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை இந்தத் தகவலை மன்னாரில் தாம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருக்கின்றார்.
அண்மையில் இலங்கையின் ஏனைய கத்தோலிக்க ஆயர்களுடன் சென்று தாம் புனித பாப்பரசரை தரிசித்தார் எனவும் அவர் கூறினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கங்கள், கவலைகள் குறித்து திருத்தந்தைக்கு அச்சமயம் விளக்கமளிக்கப்பட்டது எனவும், அப்படிப் பாதிப்புற்றோரை நேரில் சென்று ஆசீர்வதிப்பதற்கான தமது விருப்பை அவர் வெளியிட்டார் எனவும் மன்னார் ஆயர் மேலும் குறிப்பிட்டார்.
"நாட்டில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கு இந்த விசாரணைகள் வழி செய்ய வேண்டும்.  அப்படி நடப்பதன் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் மத்தியில் அரசு நம்பகத் தன்மையை வென்றெடுக்க முடியும்.
எனவே, புனித திருத்தந்தை பிரான்ஸிஸின் விஜயம் மூலம் நாட்டில் மீள்நல்லிணக்கம் மேன்மையடைய அரசு வழி செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் திருத்தந்தையின் இலங்கை விஜயத்தை அர்த்தமுள்ளதாக்கலாம்." என மன்னார் ஆயர் தெரிவித்தார்.
"இலங்கைத் தீவில் உள்ள பேரினவாத மத வெறியர்களால் அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள். 1983 இல் தமிழர்கள் தாக்கப்பட்டமை போன்று இப்போது முஸ்லிம்கள் மீது இலக்கு வைக்கப்படுகின்றது." "எந்தவித காரணமுமின்றி முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சாம்பலாக்கப்பட்டிருக்கின்றமை மிகப்பெரிய அவமானமாகும்.
இதுபற்றிய விசாரணைகள், எதுவித காரணத்தினாலும் தாமதிக்கப்படாமல் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.  சூத்திரதாரிகள் முறையான விதத்தில் கையாளப்பட வேண்டும்." என்றும் மன்னார் ஆயர் மேலும் குறிப்பிட்டார்
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet5.html

வட மாகாண ஆளுநர், அவைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:57.23 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதுவர்  தோமஸ் லிட்செருடனான குழுவினர், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இன்று காலை காலை 9.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்கில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பிலும் தேவைப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.
இதுவரை காலமும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்கள் பாராட்டத்தக்க விடயம் எனவும் சுவிஸ் தூதுவர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுவிஸ் தூதுவர், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet3.html

Geen opmerkingen:

Een reactie posten