தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!- வடமராட்சி கிழக்கில் சம்பவம்

இலங்கையில் கொள்ளையில் ஈடுபட்ட பாகிஸ்தானியர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 11:54.56 PM GMT ]
இலங்கையில் கொள்ளையில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வீசா காலாவதியாகிய நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குறித்த பாகிஸ்தான் இளைஞர் கொள்ளைச் சம்பவங்களை மேற்கெண்டுள்ளார்.
நாவலப்பிட்டி. நீர்கொழும்பு, கொம்பனித்தெரு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் 21 வயதான குறித்த பாகிஸ்தான் இளைஞர் நீண்ட காலமாக கொள்ளைகளை மேற்கொண்டுள்ளார்.
ரூபா பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
திஹரிய பிரதேசத்தில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பயன்படுத்தி நிட்டம்புவ பிரதேசத்தில் கணனிக் கடையொன்றையும் உடைத்து கொள்ளையிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது சித்தசுயாதீனமானற்றவரைப் போன்று நடித்து பொலிஸாரை திசைதிருப்ப முனைந்துள்ளார்.
கடுமையாக போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவராக இருக்கக் கூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgs0.html
குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!- வடமராட்சி கிழக்கில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 12:55.59 AM GMT ]
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த ம.மரியதாஸ் (வயது 29), அவரது இரண்டரை வயது மகன் ம.அன்புசன் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
 மரியதாஸும் அவரது மனைவியும் குடும்பப் பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம் அவரது மனைவியின் வீட்டுக்குச் சென்ற மரியதாஸ் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்றுக் காலை அப்பகுதியில் உள்ள காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலம் ஒன்றை அப்பகுதி பொதுமகன் ஒருவர் கண்டு ஊரவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது மரத்துக்கு அருகில் உள்ள பற்றைக்குள் குழந்தை ஒன்றும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இரண்டு சடலங்களையும் மீட்ட பொலிஸார் அவற்றை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலங்களை உறவினரிடம் ஒப்படைப்படைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதிவான் பி.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
மரியதாஸ் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgs2.html

Geen opmerkingen:

Een reactie posten