அனந்தி பின்னால் மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் நபர்கள்!
தென்னிலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத நபர்கள் இருவர் தன்னைப் பின்தொடர்வதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக குறித்த நபர்கள் தன்னை பின்தொடர்ந்து வருவதாகவும், தான் விஜயம் செய்யும் பகுதிகளுக்குச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போடப்பட்டிருந்த சிறீலங்கா காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான இனந்தெரியாத நபர்களின் பின்தொடர்தல் தன்னை அச்சமடைய வைக்க சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74678.html
இசைப்பிரியாவை வதைக்க உத்தரவிட்ட முக்கியஸ்தர் விபரங்கள் கசிந்தது
இதனிடையே அங்கே ஒரு இராணுவ அதிகாரி குறுக்கிடுகிறார். அவர் வெறும் 1 செக்கன் மாத்திரமே தோன்றி மறைகிறார். இருப்பினும் அவரது முகம் மிகத் தெளிவாக, மற்றும் (கமராவுக்கு மிக அருகாமையில்) பதிவாகியுள்ளது. இவர் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி என்றும், இலங்கை இராணுவத்தின் 58 படையணியைச் சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலம்பெயர் நாட்டில் வாழும் சில சிங்கள ஊடகவியலாளர்கள் இணைந்து, கொழும்பில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்த சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் மூலமாகவே இத் தகவல்களை திரட்டியுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குறித்த சிங்கள அதிகாரியின் பெயரை வெளியிட்டால் அவர் இலங்கையில் மறைந்துவாழ நேரிடும் எனவும் எச்சரிக்கபப்ட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று பின்னர், அவரது கையடக்க தொலைபேசியில் அவர் ஒரு காட்சியை படம் எடுத்தார் என்று சிங்கள சிப்பாய் ஒருவரை இலங்கை இராணுவம் தனிச் சிறை ஒன்றில் அடைத்துள்ளார்கள். பின்னர் அவர் 14 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று பின்னர், அவரது கையடக்க தொலைபேசியில் அவர் ஒரு காட்சியை படம் எடுத்தார் என்று சிங்கள சிப்பாய் ஒருவரை இலங்கை இராணுவம் தனிச் சிறை ஒன்றில் அடைத்துள்ளார்கள். பின்னர் அவர் 14 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சிங்கள சிப்பாயே தற்போது மேலும் சில ஆதாரங்களை கையில் எடுத்துக்கொண்டு வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக அறியப்படுகிறது. குறித்த இன் நபர் 58 வது படையணியில் சேவையாற்றியுள்ளார். அதனால் அவர் இசைப்பிரியாவின் கொலையாளிகள் சிலரை துல்லியமாக அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறியுள்ளார். சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிவரும் நிலையில், இந்தச் சிப்பாய் சிலவேளைகளில் சாட்சியாக மாறலாம் என்றும் நம்பப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் இன்னும் சில நாட்களில் முழுமையாக வெளியாகும்.
http://www.jvpnews.com/srilanka/74688.html
Geen opmerkingen:
Een reactie posten