தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 juni 2014

ஜ.நா புதிய மனித உரிமை ஆணையாளர் யாரும் அறியா புதியவர்!

பெரிய திருடரை விட்டு! பீற்றூட் திருடிய கள்ளரைப் பிடித்த கடைக்காரர்…

மீற்றர் வட்டி எனப்படும் அறா வட்டியை வசூலிக்கும் ரை, சப்பாத்துப் போட்ட கள்ளரை விட்டு விட்டு 5 கிலோ பீற்றூட் களவெடுத்த நபரைப் போட்டுத் தாக்கி தங்களது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்கள் வியாபாரிகள்.
எவ்வாறு கொள்ளை அடிக்கின்றார்கள் ரை கட்டிய கள்ளர் – இதோ விளக்கம்.
காசு இல்லாமல் றோலிங் முறையில் வர்த்தகம் செய்யும் மரக்கறி, பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்தக் கள்ளர்கள் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு பின்வருமாறு வட்டி வசூலிக்கின்றார்கள்.

ஒரு வர்த்தகருக்கு பத்தாயிரம் ரூபா பணத்தைக் கொடுத்து விட்டு அதை 100 நாள் தவணையில் நாள் ஒன்றிற்கு 150 ரூபா என்ற அடிப்படையில் வட்டியும் முதலும் ஒவ்வொரு நாளும் வசூலாகின்றது. மொத்தமாக பெற்று விட்டு சில்லறையாகக் கொடுக்கின்றோமே என்ற நினைப்பில் வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து 100 ஆவது நாளில் வட்டி மட்டும் 5 ஆயிரம் ரூபா பெற்றுவிடுவார்கள். இது வங்கியில் வருடாந்தம் கொடுக்கும் வட்டியிலும் பார்க்க 192 மடங்கு அதிகமானதாக இருக்கின்றது.
அத்துடன் தினசரி பணம் கொடுத்து வருவதால் இறுதியாக வரும் நாட்களில் அதாவது சுமார் மூவாயிரம் ரூபாவிற்கும் அதே வட்டி அறவிடப்படுகின்றது, இது வர்த்தகர்களுக்கு புரியவில்லை. நாள் ஒன்றிற்கு அந்த வர்த்தகரிடம் இருந்து 50 ரூபாவிற்கு மேல் அநியாயமாகக் கறக்கும் இந்தக் கள்ளர்கள் பற்றி வர்த்தகர்கள் கவனிப்பதில்லை.


ஆனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் 5 கிலோ பீற்றூட் களவெடுத்த ஒரு நபரை வர்த்தகர்கள் அடித்துத் துவைக்கும் காட்சி இது. திருநெல்வேலி வர்த்தகர்களுக்கு புரியாவிட்டாலும் இதைப் பார்க்கின்ற வாசகர்கள் அவர்களுக்கு சிலவற்றைச் சொல்லிப் புரிய வையுங்கள்.Makit
http://www.jvpnews.com/srilanka/72246.html

சந்திரிகாவின் கட்சியைக் காப்பாற்றும் இயக்கம்

அரசியலில் ஒதுங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ‘ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்தல்’ என்ற பெயரில் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கவிருக்கிறார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய ஶ்ரீ.ல.சு. கட்சியின் தலைமையினால் ஓரங்கட்டப்பட்ட மூத்த பிரமுகர்கள் பலரின் ஆதரவு சந்திரிகா அம்மையாருக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளராக நிற்கும் தீர்மானம் எதனையும் அவர் எடுக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி தெரிவித்தது.
http://www.jvpnews.com/srilanka/72254.html

ஜ.நா புதிய மனித உரிமை ஆணையாளர் யாரும் அறியா புதியவர்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக செயற்படும் அல் ஹூசைன் (50), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/72257.html

Geen opmerkingen:

Een reactie posten