தேசியத் தலைவரைப் போல் எமது இறுதிப்போரை முன்னெடுக்க திறமைமிக்க தலைமை வேண்டும்! - அடிவருடி கலாநிதி இராம் சிவலிங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 03:08.13 AM GMT ]
ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது.
ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்லவல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருதும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?
சிங்கள அரசின் அடிதடிக்ளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திட்லிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடாத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல்களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத்தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்.
இனஅழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர்வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காக போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும்.
இதனால்தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடாத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசியத் தலைவர் அதனை வய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார்.
எமது அரசியல்போரை முன்னெடுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லையேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்.
ஐந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீகாரத்தை பெறமுடியாதது, சர்வதேசத்தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பையும், அதிலும் மேலாக இவர்கள் திறமையையும் எமக்கு எடுத்துக் காட்டவில்லையா. இந்த அங்கீகாரம் பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதிவாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாட்களில், எம் உறவுகளுக்காக கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெல்லாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள்மீது நாம் கொண்ட அன்பும் பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையானால் வலிமை மிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மையமாக கொண்டு, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்க வல்ல ஓர் அணி, தகுதிவாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக்கும் விதத்தில், உருவாக்கப்பட வேண்டும்.
ஆண்டுக்கு ஓர் மாநாடும், வருடத்திற்கு ஒரு இராப்போசனமும் நடாத்துவதை இலட்சியமாகக் கொண்டு, ஐ.நா மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர் செல்வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம்பெயர் அணிகள் எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பை பூர்த்தி செய்வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத்துக்கும் முத்லிட்ம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புதுஅணியில் இணைவதே மேல்.
தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்தசங்கரி அபகரித்து தமிழரை தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழினம்; தமிழர் தேசிய கூடடமைப்பை(TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில்லையா.
அறவழிப் போராட்டத்தை வழிநடாத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு செம்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் தலைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க்வல்ல ஓர் திறமைமிக்க தலமையும் எமக்கு வேண்டும்.
எம் இனத்தின் வெற்றியும் தோல்வியும், எமது எதிரியான் சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது.
கலாநிதி இராம் சிவலிங்கம்
sivalingham@sympatico.ca
sivalingham@sympatico.ca
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgoy.html
சிவிலியன் ஒருவரையே வடமாகாண ஆளுநராக நியமிக்க வேண்டும்!- வாசுதேவ
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 03:07.32 AM GMT ]
வடமாகாண சபைக்கான முதன்மைச் செயலாளரை நியமிக்கும் போதும், அம்மாகாணத்திற்கான பொலிஸ் அத்தியட்சகரை நியமிக்கும் போதும் மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுடன் இப்பதவிகளுக்கானவர்களை நியமிக்க வேண்டுமென்பது தான் நியாயம் என அவர் கூறினார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தத்தை முன்னெடுக்க வேண்டுமென்று இந்தியாவோ அல்லது வேறெந்த நாடுகளோ எம்மீது அழுத்தம் கொடுக்க முடியாது.
தேசியப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக ஜனாதிகதி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் அனைவரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு விவாதம் மேற்கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானமே நிலைத்திருக்கக் கூடிய தீர்வாக அமையும்.
அரசாங்கம் வடமாகாண சபையுடன் நல்லுறவுடன் செயற்படவில்லை. முதலமைச்சருக்கான அதிகாரங்களையும் வழங்கவில்லை. 13வது திருத்தத்திலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வடமாகாண சபை தொடர்பில் இந்தச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
வடமாகாண ஆளுநராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியே உள்ளார். இது மாற்றப்பட வேண்டும். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு வடமாகாண சபையுடன் நல்லுறவு இல்லாதவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வர சம்மதிக்கமாட்டார்கள்.
நாட்டில் இனவாத சக்திகளின் அதிகாரப்பரவலாக்கலை இல்லாதொழிக்கும் அரசியலமைப்பு எமக்கு தேவை. தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கும் புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமானது.
அதிகாரப்பரவலாக்கலை வழங்கினால் நாடு பிரியும் என்பது, பாம்புப் புற்றுக்குள் செல்லும் போதே அதற்குள் பாம்பு இருப்பதாக ஆரூடம் சொல்வது போலானதாகும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZhx7.html
Geen opmerkingen:
Een reactie posten