முல்லைத்தீவு தமிழ் இளைஞர்கள் 37 பேர் இராணுவ சேவையில்
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் இராணுவத்தின் பொதுச் சேவையணி- இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது.
http://www.jvpnews.com/srilanka/71522.html
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் – விஜயகாந்த்
தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் விஜயகாந்த் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்கள் அனைத்து மனித உரிமைகளோடு, ஏனைய மக்களுடன் இணைந்து வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவதில் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண வேண்டுமெனவும் விஜயகாந்த் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71529.html

Geen opmerkingen:
Een reactie posten