நந்திக்கடலில் விளக்கெற்றி! வற்றாப்பளை பொங்கலுக்குத் தயாராகும் பக்தர்கள்
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் புடைசூழ தீர்த்தம் எடுப்பதற்காக புறப்படுவர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும்.
இந்த ஆலயத்iதை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்களின் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது.
பொங்கல் நடைபெறப் போகின்ற தென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது. பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர்.
கடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் தண்ணீரால் நிறைந்துவிடும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசை செய்வர்.
அதன் பின்னர் பிற்பகல் சுமார் 6.30 அளவில் அங்கிருந்து காட்டா விநாயகர் கோயிலை நோக்கிப் புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்த்தக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, நிறைகுடம் வைத்து வரவேற்பர். நிறைகுடப் பந்தல்களில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டாவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்துவிடுவர்.
அங்கு விசேட பூசை நடைபெறும். அந்தத் தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கரையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். தொடர்ந்து ஏழு நாள்கள் கடல்நீரில் விளக்கெரியும்.
ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு பொங்கல் பொருள்களுடன் கடல்நீரில் எரியும் விளக்கு என்பன வாத்தியங்களுடன் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். அன்று பகல் தொடக்கம் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இரவு பொங்கல் இடம்பெறும்.
http://www.jvpnews.com/srilanka/71627.html
இலங்கைக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது: VJP
அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: “அமைச்சரவைக் குழுக்களை பிரதமர் கலைத்திருப்பதன் மூலம், அந்தந்தத் துறையைச் சேர்ந்த அனைத்து விஷயங்களுக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.
காஷ்மீர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்யும். ஏற்கெனவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசின் தவறானக் கொள்கையால்தான் தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். விரைவில் பிரதமரால் இதற்காக ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக அரசு, எந்தப் பிரச்சினையையுமே சுமுகமாகப் பேசித் தீர்க்கும். இந்த அடிப்படையில்தான் மத்திய அரசின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி அழைக்கப்பட்டார்.
தற்போது, மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில், மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது” என்றார்.
http://www.jvpnews.com/srilanka/71630.html
வடக்கில் நிலம் மீட்க வீதியில் போராட்டம்
அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் ஒன்பது ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.
குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர் பொ.ஜங்கரநேசன் உறுப்பினர்கள், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து நில அளவை பணிகளை தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். நில அளவை அதிகாரிகள் தாம் திரும்பி செல்கின்ற போதும் இது தொடர்பில் உரிய முறைப்பாடுகளை செய்யப்போவதாக கூறினர்.
இதே போன்று தென்மராட்சியின் ஏ-9 வீதியோரமாக நுணாவில் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை இன்று நில அளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அங்கும் திரண்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது முற்றுகையினால் நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.எனினும் நில அளவை பணிகளிற்கு மக்கள் ஆதரவு தர மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
http://www.jvpnews.com/srilanka/71633.html
Geen opmerkingen:
Een reactie posten