தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

முல்லை. முள்ளியவளையில் கத்திக் குத்து! ஒருவர் உயிரிழப்பு!

யுவதியை கடத்த முயற்சித்த இளைஞரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பொதுமக்கள்!
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 09:10.58 AM GMT ]
சிலாபம் பிரதேசத்தில் யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மஹாவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் மேலும் சிலருடன் இணைந்து மதுபானம் அருந்தி விட்டு வான் ஒன்றில் பயணித்து கொண்டிருந்தார்.
அருகில் சென்ற யுவதியை இந்த இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் அருட் தந்தை ஒருவர் யுவதியை தேவாலயத்திற்குகள் வருமாறு அழைத்துள்ளார்.
யுவதி தேவாலயத்தை நோக்கி சென்ற போது, இளைஞர் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார்.
சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgu3.html
முல்லை. முள்ளியவளையில் கத்திக் குத்து! ஒருவர் உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 09:37.08 AM GMT ]
 முல்லைத்தீவு,  முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கேப்பாபிலவிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட மோதலின் போது குறித்த இருவரும் கத்திக் குத்துக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் காயங்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலே கத்திக்குத்து வரை போய முடிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgu4.html

Geen opmerkingen:

Een reactie posten