தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

கனடியத் தமிழருக்காக அமெரிக்கா நடத்திய கருத்தரங்கு!



சிலருக்கு அரசாங்கம் கொடுக்கும் எலும்பின் உருசியில் கண்கள் மறைத்து நிற்கின்றது: சிறீதரன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 04:15.58 PM GMT ]
எமது கழக சீருடைகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வைக்க ஒரு சிறு அலுமாரி கூட இல்லை என கிளிநொச்சி கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பாலாசிங்க சேதுபதி, கட்சியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் ஆகியோர் கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அங்கு கலந்து கொண்டிருந்த கிருஸ்ணபுரம் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் விளையாட்டுவீரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் மாவட்டத்தில் கரப்பந்து, கிளித்தட்டு உட்பட்ட விளையாட்டுக்களில் எங்களுடைய கிராமங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பிரபல்யமானமானவர்களாகவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு புகழ் சேர்ப்பவர்களாகவும் இருந்தார்கள்.
போருக்கு பின் இன்று எங்களுடைய கழகத்தையும் விளையாட்டுக்களையும் கட்டியெழுப்ப மிகுந்த கஸ்டப்படுகின்றோம்.
இந்த விளையாட்டு மைதானம்கூட பிரதேச சபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரனின் முயற்சியில் பா.உறுப்பினர் சி.சிறீதரனாகிய உங்களிடம் குறிப்பிட்ட நிதியைப்பெற்று உருவாக்கப்பட்டதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
ஆனாலும் இன்னும் பல வசதிகள் தேவைப்படுகின்றன. உண்மையில் எங்களுடைய கழகத்தின் வீரர்களின் சீருடைகளை  விளையாட்டு உபகரணங்களை வைக்க ஒரு அலுமாரியோ அல்லது ஒரு அறையோ எம்மிடம் இல்லை.
இந்த மைதானமும் இன்னும் புனரமைக்கப்பட்டு சகலதுறை விளையாட்டுக்களும் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தேவைகளை பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
போருக்கு பின் எமது மக்களின் வாழ்க்கை புரட்டிப்போட்டதுபோல ஆகியிருக்கின்றது. அது பொருளாதார ரீதியிலும் உடல் உள ரீதியிலான காயங்களில் மட்டுமே.
தமிழ் மக்களின் கொள்கையை போரை தமிழ் மக்கள் மீது திணித்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாம் எமது மண் எமது கிராமம் என்ற எங்களுக்குள் இருக்கின்ற பற்றுதல்தான் மீண்டும் இந்த மண்ணின் வேரடி மைந்தர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தியிருக்கின்றது.
உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் அர்ப்பணிப்புகள் உண்டு. அந்த அர்ப்பணிப்புக்கான பிரதிபலனை அடையும் எம்மை வந்துகொண்டிருக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.
ஆனால் இங்கு அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று அமைச்சுப் பதவிளையும் வேறுவேறு சலுகைகளையும் பெற்றுக்கொள்ள இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு, தமிழ் மக்களை நோக்கி சர்வதேசம் கொண்டுவருகின்ற நல்ல எதிர்காலத்தை எதிர்ப்பதில் முன்னிற்கின்றன.
அந்த அரசாங்கம் கொடுக்கும் எலும்பின் உருசியில் கண்கள் மறைத்து நிற்கின்றது சில தேசவிரோத கும்பல்களுக்கு.
ஆடம்பமாக கார்களிலும் உயர் ரக வாகனங்களிலும் பாதுகாப்பு அணிகள் புடைசூழ இந்தக்கிராமங்களுக்குள் மக்களில் அக்கறையுள்ளவர்கள்போல் நுழையும் புல்லுருவிகளின் தனிப்பட்ட சொத்துவிபரங்களை கேட்டுப்பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
வங்கி நிலுவைகளை கேட்டுப்பாருங்கள் மயங்கிப் போவீர்கள். இந்த சொத்துக்களை சேர்த்துவிட்டு. இங்கு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகின்றவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
எங்களுக்கு எங்கே வசந்தம் இருக்கின்றது. இன்றைக்கும் இராணுவ கெடுபிடிகளோடுதானே வாழுகின்றோம். ஆகவே நாம் எமது சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதுதான் எமது எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும்.
உங்கள் விளையாட்டுத்துறையை ஊக்கு தொடர்ந்தும் எங்கள் உதவிகள் நிச்சயம் கிட்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaer2.html
வெள்ளவத்தை கொள்ளைச் சம்பவம்: சந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 01:45.22 PM GMT ]
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுலகம் தெரிவித்தது.
அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதி கடத்திச் செல்லப்பட்டு அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பின்னர் குறித்த நபர் வீதியில் கைவிடப்பட்டிருந்தார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaery.html

கனடியத் தமிழருக்காக அமெரிக்கா நடத்திய கருத்தரங்கு
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 03:38.40 PM GMT ]
அமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் மற்றும் வேலைக்கான விசா பெறுதல் தொடர்பாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை நடத்தியது.
கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை பங்கேற்றோருக்கு வழங்கியது.
மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு மார்க்கம் கொண்வென்சன் சென்ரரில் இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் - பொருளாதாரம், வதிவுரிமை அல்லாத விசாப் பிரிவு, பொதுப் பணித்துறை ஆகியவற்றிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நால்வர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் உயர் கல்வி கற்றல், வணிக முதலீடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான பல்வேறு வகையான விசாக்கள் தொடர்பாக அவர்கள் விபரங்களை வழங்கினார்கள்.
கருத்தரங்கின் போது பங்கேற்பாளரின் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் இறுதியில் தூதரக அதிகாரிகள் பங்கேற்பாளரோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர். இத்தகைய ஒரு கருத்தரங்கைக் கனடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்தமை மிகவும் சிறப்பானதும் பயனுள்ளதும் எனக் கலந்து கொண்ட பலர் கருத்துத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaer0.html

Geen opmerkingen:

Een reactie posten