தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 juni 2014

சிலருக்கு அரசாங்கம் கொடுக்கும் எலும்பின் உருசியில் கண்கள் மறைத்து நிற்கின்றது: சிறீதரன் எம்.பி!



எமது கழக சீருடைகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வைக்க ஒரு சிறு அலுமாரி கூட இல்லை என கிளிநொச்சி கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பாலாசிங்க சேதுபதி, கட்சியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் ஆகியோர் கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அங்கு கலந்து கொண்டிருந்த கிருஸ்ணபுரம் கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் விளையாட்டுவீரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் மாவட்டத்தில் கரப்பந்து, கிளித்தட்டு உட்பட்ட விளையாட்டுக்களில் எங்களுடைய கிராமங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பிரபல்யமானமானவர்களாகவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு புகழ் சேர்ப்பவர்களாகவும் இருந்தார்கள்.
போருக்கு பின் இன்று எங்களுடைய கழகத்தையும் விளையாட்டுக்களையும் கட்டியெழுப்ப மிகுந்த கஸ்டப்படுகின்றோம்.
இந்த விளையாட்டு மைதானம்கூட பிரதேச சபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரனின் முயற்சியில் பா.உறுப்பினர் சி.சிறீதரனாகிய உங்களிடம் குறிப்பிட்ட நிதியைப்பெற்று உருவாக்கப்பட்டதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
ஆனாலும் இன்னும் பல வசதிகள் தேவைப்படுகின்றன. உண்மையில் எங்களுடைய கழகத்தின் வீரர்களின் சீருடைகளை  விளையாட்டு உபகரணங்களை வைக்க ஒரு அலுமாரியோ அல்லது ஒரு அறையோ எம்மிடம் இல்லை.
இந்த மைதானமும் இன்னும் புனரமைக்கப்பட்டு சகலதுறை விளையாட்டுக்களும் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு தேவைகளை பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கிருஸ்ணபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
போருக்கு பின் எமது மக்களின் வாழ்க்கை புரட்டிப்போட்டதுபோல ஆகியிருக்கின்றது. அது பொருளாதார ரீதியிலும் உடல் உள ரீதியிலான காயங்களில் மட்டுமே.
தமிழ் மக்களின் கொள்கையை போரை தமிழ் மக்கள் மீது திணித்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாம் எமது மண் எமது கிராமம் என்ற எங்களுக்குள் இருக்கின்ற பற்றுதல்தான் மீண்டும் இந்த மண்ணின் வேரடி மைந்தர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தியிருக்கின்றது.
உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் அர்ப்பணிப்புகள் உண்டு. அந்த அர்ப்பணிப்புக்கான பிரதிபலனை அடையும் எம்மை வந்துகொண்டிருக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.
ஆனால் இங்கு அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று அமைச்சுப் பதவிளையும் வேறுவேறு சலுகைகளையும் பெற்றுக்கொள்ள இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு, தமிழ் மக்களை நோக்கி சர்வதேசம் கொண்டுவருகின்ற நல்ல எதிர்காலத்தை எதிர்ப்பதில் முன்னிற்கின்றன.
அந்த அரசாங்கம் கொடுக்கும் எலும்பின் உருசியில் கண்கள் மறைத்து நிற்கின்றது சில தேசவிரோத கும்பல்களுக்கு.
ஆடம்பமாக கார்களிலும் உயர் ரக வாகனங்களிலும் பாதுகாப்பு அணிகள் புடைசூழ இந்தக்கிராமங்களுக்குள் மக்களில் அக்கறையுள்ளவர்கள்போல் நுழையும் புல்லுருவிகளின் தனிப்பட்ட சொத்துவிபரங்களை கேட்டுப்பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
வங்கி நிலுவைகளை கேட்டுப்பாருங்கள் மயங்கிப் போவீர்கள். இந்த சொத்துக்களை சேர்த்துவிட்டு. இங்கு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகின்றவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
எங்களுக்கு எங்கே வசந்தம் இருக்கின்றது. இன்றைக்கும் இராணுவ கெடுபிடிகளோடுதானே வாழுகின்றோம். ஆகவே நாம் எமது சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதுதான் எமது எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும்.
உங்கள் விளையாட்டுத்துறையை ஊக்கு தொடர்ந்தும் எங்கள் உதவிகள் நிச்சயம் கிட்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaer2.html

Geen opmerkingen:

Een reactie posten