தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

மோடிக்கு மேலும் ஆத்திரமூட்டும் செயல்: 29 இந்திய மீனவர்கள் சிங்களத்தால் கைது !

நீதிமன்ற கூண்டில் ஏறிய கோட்டபாய: அதனால் மீடியாக்களை தடுத்தனர் பொலிசார் !
02 June, 2014 by admin
கடந்த 27ம் திகதி(செவ்வாய்கிழமை) கோட்டபாய ராஜபக்ஷ கல்கிஸை நீதிமன்றில் கூண்டில் ஏறியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷ இறந்த லசந்த விக்கிரமதுங்கவுக்கு எதிராக முன்னர் மான நஷ்ட வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இலங்கை அரசு மிக்- 27 ரக விமானங்களை வாங்கியதில், கோட்டபாய ராஜபக்ஷ பெரும் பணத்தை கமிஷனாகப் பெற்றுக்கொண்டார் என , லசந்த விக்கிரமதுங்க முன்னர் எழுதி இருந்தார். இதன் பின்னரே அவரை இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றார்கள். இது இவ்வாறு இருக்க இந்த வழக்கில் தனது வாக்குமூலத்தை பதிவுசெய்யாது டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தார் கோட்டபாய. இறுதியாக நீதிபதியின் கடுமையான உத்தரவுக்கு அமைய, அவர் கடந்த செவ்வாய்கிழமை கல்கிஸை(மவுண்டலவேனியா) நீதிமன்றம் சென்றிருந்தார். இதனை அறிந்த பல ஊடகவியலாளர்கள் அங்கே படையெடுத்திருந்தார்கள்.

இருப்பினும் அங்கே ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் அனைத்து மீடியாக்காரர்களையும் உள்ளே செல்லவிடாது தடுத்துவிட்டார்கள். 27ம் திகதி நடைபெற்ற இந்த வழக்கில், கோட்டபாய ராஜபக்ஷவை குறுக்கு கேள்வி கேட்டவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார். இவரே இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார் என்பது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். சுமந்திரன் குறுக்கு கேள்வி கேட்ப்பதையும் அதற்கு கோட்டபாய பதில் கூறுவதையும் யாரவது படம் எடுத்துவிடக் கூடாது என்பதில் சிங்கள பொலிசார் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். நீதி மன்றத்தினுள் புகைப்படம் எடுக்க முடியாது தான். ஆனால் எவராவது எடுத்திருந்தால் நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6913

லண்டனில் சிங்கள கிரிகெட் அணிக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது !
02 June, 2014 by admin
தமிழினத்தின் அழிவில் தங்களை கட்டியெழுப்ப நினைக்கும் சிங்கள அரசின் துடுப்பாட்ட அணியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியத்தமிழ் இளையோர் அமைப்பினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. லண்டன் சென் ஜோன்ஸ் வூட்டில் அமைந்துள்ள "லோட்ஸ்" மைதானத்திற்கு வெளியே இந்த பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது. எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் ஒவ்வொருவரும் சிங்கள இனப்படுகொலை அரசுக்கெதிரான தங்கள் எதிர்ப்பை மிகவும் ஆவேசமாக வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே இதில் கலந்துகொண்டனர் என்பது வருந்தத்தக்க விடையமாகும்.

தமிழர்கள் குறைந்த அளவில் கலந்துகொண்டதால், துடுப்பாட்டத்தை பார்க்கச் சென்ற சிங்களப் பெண்கள் அங்கே கூடி நின்ற தமிழர்களைப் பார்த்து அங்க அசைவுகளால் கேலிசெய்துள்ளார்கள். இதேவேளை சிங்கள இளைஞர்களும் கைகளையும் விரல்களையும் காட்டி தமிழர்களை இழிவுபடுத்தி நக்கல் அடித்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட எங்கள் உறவுகளின் இரத்தத்தில் தோய்ந்த அந்த சிறிலங்கா கொடியைத் தாங்கியபடி அந்த துடுப்பாட்ட அணியினர் விளையாடவந்துள்ளதை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வு ஏன் எமது பெரும்பாலான மக்களுக்கு வரவில்லை என்பது வேதனையளிக்கும் கேள்வியாக உள்ளது.

தாயகத்தில் அவலங்கள் சுமந்து, ஆபத்தான நிலையில் தமது இருப்பை உறுதி செய்ய போராடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்கள் தான் என்பதனை புகலிட தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து எழுச்சிபெறவேண்டும் என தமிழ் இளையோர் அமைப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.





http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6912

மோடிக்கு மேலும் ஆத்திரமூட்டும் செயல்: 29 இந்திய மீனவர்கள் சிங்களத்தால் கைது !
02 June, 2014 by admin
கடந்த திங்கள் அன்று டெல்லி சென்ற மகிந்த ராஜபக்ஷ, நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்களையும் அவர் டெல்லி பயணத்திற்கு முன்னதாக விடுதலை செய்தார். ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக நேற்றைய தினம்(01) இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள் 29 பேரைக் கைதுசெய்துள்ளார்கள். வழமைபோல மீனவர்களின் வலைகளை அறுத்து, படகுகளை சேதப்படுத்தி பின்னர் மீனவர்களை தாக்கி அவர்களை கைதுசெய்து கொண்டுசென்றுள்ளார்கள் இலங்கைப் படையினர். இதனை செல்வி ஜெயலலிதா வன்மையாகக் கண்டித்துள்ளார். இலங்கை மீது காட்டமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் எதனை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் நாம் எதனை நினைக்கிறோமோ அதனையே செய்வோம் என்ற வகையில் மகிந்தர் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறார். இலங்கை கடற்படையினரின் இச் செயலானது, நரேந்திர மோடியை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இச்செயலுக்கு டெல்லி அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6911

Geen opmerkingen:

Een reactie posten