[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 07:27.25 AM GMT ]
இதன்போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ நிசாம் அவர்களின் அழுத்தத்தின் பேரில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தினப் போட்டியில் வரலாற்றில் ஒருபோதும் நடக்காத இந்நிகழ்வை விரும்பாத நடுவனம் வகிக்க வந்த நடுவனர்கள் வெளிநடப்பு செய்தமையால் சில போட்டிகள் ஆரம்பிப்பதற்கு கால தாமதமானதாக போட்டிக்கு வருகை தந்தவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
போட்டிக்கு தயாராக ஒப்பனை செய்த வண்ணம் மாணவர்கள் இருந்ததாகவும் அன்றைய தினம் போட்டி பி.ப. 3 மணிக்கே ஆரம்பமானதாகவும் தெரிவித்தனர்.
மாகாண கல்விப் பணிப்பாளரிடம் பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்கள், இது பட்டிருப்பு தொகுதி தமிழ் தொகுதி ஆகவே தேசிய கீதத்தினை தமிழ் மெழியில் இரண்டாவதாகவேனும் இசைக்கப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையினை மாகாண கல்விப் பணிப்பாளர் முற்றுமுழுதாக மறுத்ததாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஒரு சிலருக்கு பதிலளித்தமையை அறியமுடிகின்றது.
இந்தச் செயற்பாடானது, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தனது பதவியினை தக்கவைத்தக் கொள்வதற்காக ஆளுனர் அவர்களை திருப்திபடுத்த மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZguy.html
நாங்கள் ஈழம் கேட்டது உண்மை! பிள்ளையான், கருணாவின் இன்றைய நிலை என்ன? பொன் செல்வராசா எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 11:43.49 PM GMT ]
இன்று வட-கிழக்கில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் நடக்கிறது, அதனை தாம் செய்வதாக மார்பு தட்டும் அரசு, எதற்காக தமிழர்களை அழிக்க நினைக்கிறது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgsz.html
Geen opmerkingen:
Een reactie posten