தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

யாழில் சுமந்திரன் கொடும்பாவி TNA யின் அலுவலக வாசலில் தொங்குகிறது !

யாழ் வடமாராட்சியில் உள்ள மூத்தவினாயகர் கோவிலுக்கு முன்பாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் , அலுவலகத்தின் பெயர் பலகையில் சுமந்திரனது கொடும்பாவி கட்டி தொங்கடவிடப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அதில் "உன் ஆடம்பர வாழ்கைக்காக தமிழ் இனத்தையே கூறுபோடுகிறாயா" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அதிர்வின் சிறப்பு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதாவது நாம் இங்கே ஒரு விடையத்தை நன்றாக கவனிக்கவேண்டும். சிங்களவரோடு ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தவேண்டும் என்கிறார் சுமந்திரன். ஆனால் நேற்று முன் தினம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழ் பெண்ணையும் அவரது 8 வயதுப் பிள்ளையையும் , கட்டநாயக்காவில் கைதுசெய்துள்ளது பயங்கரவாத தடுப்பு பிரிவு.
அவர்களை விடுவிக்க துப்பில்லாத இந்த சுமந்திரன் போன்றவர்கள் , யாழ் சென்ற மைத்திரி பலவுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட முண்டியடித்து பெரும் பணத்தை ஆறாக ஓடவிட்டுள்ளார்கள். யாழில் ஆகக் கூடிய பணத்தை லஞ்சமாக கொடுத்த நபர்களே மைத்திரியோடு உட்கார்ந்து மதிய உணவை நக்கியுள்ளார்கள். இலங்கை செல்லும் தமிழர்களை கைதுசெய்யும் மைத்திரியின் அரசுடன் தமிழர்கள் எவ்வாறு ஒரு இணக்கத்தை தோற்றுவிப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? புலிகள் அழிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது என்கிறார்கள் சிங்களவர்கள். ஆனால் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டம் ஏன் அமுலில் இருக்கவேண்டும் ?
இந்தச் சட்டத்தை பாவித்து எவரையும் கைதுசெய்யலாம். இச்சட்டம் தமிழர்கள் மீது பாய்கிறது. இதனை தடுத்து நிறுத்த துப்பில்லாத சம்பந்தரும் , சுமந்திரனும் ஏதை பு.....ங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லையே ? 
http://www.athirvu.com/newsdetail/2466.html

Geen opmerkingen:

Een reactie posten