தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 maart 2015

தமிழீழ விடுதலையையும் தமிழர்களையும் ஆழமாக நேசித்த பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை .

ஹிருனிக்கா அரசாங்கத்தை கண்டித்துள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:10.30 PM GMT ]
எதிர்பார்த்தவை நடக்காது போனால் தாம் உட்பட்ட ஒவ்வொருவரும் அரசாங்கத்தில் இருந்து விலக தாமதிக்க மாட்டார்கள் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட்ட சில பெண்களே உயிராபத்துக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மைத்திரிபால தோல்வியடைய வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்த பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் பலர் இப்போது சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை மீண்டும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக நியமித்தமையை ஹிருனிக்கா கண்டித்துள்ளார்.
தம்மை பொறுத்தவரை பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இரண்டு ஊடக நிறுவனங்களுக்கு இடையில் பதற்றநிலை
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:21.10 PM GMT ]
இலங்கையின் எம்டிவி ஊடக நிறுவனத்துக்கும் தெரண ஊடக நிறுவனத்துக்கும் இடையில் இன்று மாலை பதற்ற நிலை தோன்றியது.
எம்டிவியின் செய்தியாளர்கள் சிலர், தெரண அலுவலகத்துக்கு சென்றபோதே இந்த பதற்றநிலை தோன்றியது.
கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள மகாராஜா நிறுவனத்துக்கு சொந்தமான காணி தொடர்பில் தெரண நிறுவனத்தின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவே தமது செய்தியாளர்கள் தெரண அலுவலகத்துக்கு சென்றதாக எம்டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் எம்டிவி செய்தியாளர் தமது அலுவலகத்துக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக தெரன நிறுவனத்தினர் குற்றம் சுமத்தினர்.
கோட்டை பகுதியில் உள்ள காணி, மகாராஜா நிறுவனத்துக்கு சொந்தமானது அல்ல என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் கருத்தை மாத்திரம் நேற்று தெரண தமது செய்தியில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் தெரணவின் கருத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தமது செய்தியாளர்கள் அங்கு சென்றதாக எம்டிவி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எம்டிவியின் செய்தியாளர்கள் தெரண நிறுவனத்தினரால் பொலிஸிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டனர்.

இலங்கை அகதிகளுக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்!- கிரான் ராஜ்ஜூ
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:29.01 PM GMT ]
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்று மத்திய உள்துறை இராஜாங்க அமைச்சர் கிரான் ராஜ்ஜூ உறுதியளித்துள்ளார்.
சென்னையில் இருந்து 45 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள தமிழகத்தின் கும்மிடிபூண்டி முகாமுக்கு விஜயம் செய்த அவர், மத்திய அரசாங்கம், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்ய தயாராக உள்ளது.
அதேநேரம் மாநில அரசாங்கத்தின் உதவிகளும் இதன்போது பெற்றுக்கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அகதிகள் தொடர்பில் தமிழகத்திடம் இருந்து அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலையையும் தமிழர்களையும் ஆழமாக நேசித்த பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை .
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:34.46 PM GMT ]
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லீ க்வான் யூ அவர்களின் மறைவையொட்டி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இரங்கல் தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மிகப்பெரும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட சிங்கப்பூர் மக்கள் ஈழத்தமிழர்கள் போன்று ஓர் பெரும் அழிவை தாங்கியவர்களே.‪ 
லீ ‪க்வான் ‪‎யூ எனும் ஓர் விடிவெள்ளியின் மலர்வு அந்த இனம் தன்னைத் தானே ஆட்சிகொள்வதற்கு ஓர் நாட்டை நிறுவுவதற்கு காரணமாய் ஆனது.
அந்த அற்புத பிறவியே பின்னர் சிங்கப்பூரின் தந்தையாகவும், புதிய சிற்பியாகவும் அதையும் தாண்டி ஒட்டுமொத்த அடக்குமுறைகளுக்கும் எதிரான சர்வதேச குரலாக ஒலித்தது.
தன்னினம் பட்ட துயர்களை வேறு எந்தவோர் இனமும் சந்திக்க நேரக்கூடாது என்ற பொதுநலத்தின் சாட்சியாய் வாழ்ந்த பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ அவர்கள் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை கண்டு துடியாய் துடிதுடித்தார்.
இனவிடுதலைக்காய் போராடி தமக்கான நாடமைத்த பலர் ஊமைகளாய் தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்தபோது சர்வதேசத்தின் மத்தியில் தனிப்பெரும் தமிழீழ ஆதரவுக் குரலாய் லீ ‪க்வான் ‪‎யூ அவர்களின் குரல் ஒலித்தது.
சிங்களப் பேரினவாத தலமைகள் தமிழருக்கு ஒருபோதும் உரிமைகளை கொடுக்காது என்ற யதார்த்தத்தை வரலாற்று ரீதியான அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்ட லீ ‪க்வான் ‪‎யூ அவர்கள் தமிழீழமே அதற்கு தீர்வாக அமையும் என்று முழங்கினார்.
உலகின் போற்றத்தக்க மனிதராகவும் பல உலகத்தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ அவர்களின் தமிழீழ மக்கள் சார்ந்த நிலைப்பாடு சிங்கள கொடுங்கோலர்களுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கியதுடன் தமிழீழ தேசத்திற்கான சர்வதேச தலைவர் ஒருவரின் அங்கீகாரமாகவும் அவதானிக்கப்பட்டது.
தமிழினம் இலங்கைத்தீவில் எதிர்நோக்குவது திட்டமிட்ட இனவழிப்பே என்று அவரின் இறுதி நாட்கள் வரைக்கும் உலகறிய உரைத்தார். தமிழனின் அங்கீகாரமாத் திகழ்ந்தார். எம் தாய்மொழியான தமிழை சிங்கப்பூரின் அரச மொழியாக்கி சங்கத்தமிழுக்கு செங்கம்பள வரவேற்பளித்தார்.
தமிழினத்துக்கும், தமிழீழ விடுதலைக்கும் தமிழ் மொழிக்கும் லீ ‪க்வான் ‪‎ யூ அவர்கள் ஆற்றிய சேவை என்பது தமிழர்களின் வரலாற்றில் அழியாத சுவடுகளாக அமைகின்றது .
அப்பேற்பட்ட ஓர் அரிய உயிரை, தோள் தட்டி உரமேற்றும் ஓர் தந்தையை, பார் போற்றும் ஓர் தானைத் தலைவனை இழந்தது தமிழினத்துக்கு பெருந்துயராகும்.
மக்களுக்காய் வாழ்ந்து மடியும் எவரும் ஒரு போதும் அழிவதில்லை என்ற எமது தமிழீழத் தேசியத் தலைவரின் வரிகளுக்கு அமைய பெருந்தலைவர் ‪லீ ‪க்வான் ‪யூ அவர்களின் எண்ணமும், சிந்தனையும் தமிழீழ தேசத்தின் அகத்தில் நிலைவாழ்வு கொள்ளும்.
'பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?' – என்று உணர்வூட்டிய தந்தையின் மறைவையொட்டி தமிழ் மக்களின் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் எமது ஆழமான இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை .
ஊடக தொடர்புகளுக்கு : media@iceelamtamils.com
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt4C.html

Geen opmerkingen:

Een reactie posten