தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல்!

எனக்கு கிடைத்த அமைச்சுப் பதவி குறித்து திருப்தி அடைய முடியாது!– திஸ்ஸ கரலியத்த
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:14.26 AM GMT ]
எனக்கு கிடைத்த அமைச்சுப் பதவி குறித்து திருப்தி அடைய முடியாது என பௌத்த சாசன அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் காலத்தில் கடுமையாக தாக்கிப் பேசியவர்களுக்கு நல்ல அமைச்சுக்கள் கிடைத்துள்ளன.
நாங்கள் அவ்வாறு தாக்கிப் பேசவில்லை. எனினும் அண்மையில் எமக்குக் கிடைக்கப்பெற்ற பதவிகள் குறித்து திருப்தி அடைய முடியாது.
கடந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் பெற்ற போதிலும் அதிருப்தியிலேயே இருந்தோம்.
எம்மை விடவும் பிரதி அமைச்சர்களுக்கு நல்ல நிலைமை காணப்படுகின்றது.
எனக்கு கிடைத்த அமைச்சுப் பதவி தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து வருகின்றேன்.
இன்னமும் நான் ஊருக்குப் போகவில்லை, ஊர் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என பார்த்து அதன் அடிப்படையில் அமைச்சுப் பதவி குறித்து தீர்மானிப்பேன் என திஸ்ஸ கரலியத்த கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி! தேசிய வளங்கள் தாரைவார்ப்பு!- நாமல் எம்.பி.
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:33.58 AM GMT ]
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில் வளமிக்க அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடல் வளத்தையும் இந்த அரசு தாரை வார்த்து விட்டதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். 
அம்பாந்தோட்டை சிரிபோபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் தெரிவித்ததாவது,
தற்பொழுதுள்ள அரசாங்கம் இதனைவிடவும் பொறுப்பாக செயற்படுமென தான் நம்புவதோடு கடந்த ஆட்சியின் போது நாம் எவ்வித அச்சமுமின்றி வாழ்ந்து வந்தோம்.
பல்வேறு முறைப்பாடுகள் எமக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்தாலும் இவற்றின் உண்மை நிலையினை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு கூடுதல் வாக்குகளை அளித்தார்கள்.
நாம் இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வந்தோம் இன்று அவை நிறுத்தப்பட்டுள்ளது. இவை பற்றி மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் பகிர்ந்து விட்டார்கள். வடக்கு கடல் பிரதேசத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்தே மீன்பிடிக்கிறார்கள்.
அங்குள்ளவர்களுக்கு இங்கு வர முடியும். ஆனால் இங்குள்ளவர்கள் அங்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல்!
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:03.19 AM GMT ]
அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீதி மன்ற விசாரணைக்களுக்காக இன்று வவுனியா உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அங்கு நீதிபதியின் முன் மேற்படி விடயம் தொடர்பில் கைதிகளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர்களை நீதிமன்றில் பார்வையிடுவதற்காக சென்றிருந்த குடும்ப அங்கத்தினர் தெரிவித்தனர்.
அவ்வாறு முறைப்பாடு செய்தமையினால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் குறித்த அனுராதபுரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
அத்துடன், அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருடகளையும் குடும்ப உறவினர்கள் வழங்க விடாது கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி துரத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மாலை வேளை வரை உறவினர்கள் வீதியில் கண்ணீரோடு நின்று மன்றாடிய போதும் ஈவிரக்கம் ஏதுமின்றி கைதிகள், தமது உறவினர்களை பார்வையிட அனுமதி மறுத்து விட்டதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை வவுனியாவுக்கு அழைத்து வந்திருந்த சிறை அதிகாரிகளே மேற்படி சித்திரவதைகளை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUlx7E.html

Geen opmerkingen:

Een reactie posten